புதன், 12 நவம்பர், 2014

மலையாள அவியல் செய்வது எப்படி ? அது இப்படி !!









               மலையாள  அவியல்.                   


தேவையான பொருட்கள் :- வாழைக்காய் = 1, 


கத்திரிக்காய் கால் கிலோ, பெரிய உருளைக் 


கிழங்கு = 1, பீன்ஸ், காரட், அவரை,பச்சைப் 


பட்டாணி மொத்தம் 300 கிராம் ,  முருங்கைக்காய் 


2,சின்ன வெங்காயம் 100 கிராம் , சீரகம் சிறிதளவு, 


பச்சை மிளகாய் 5, தேங்காய் துருவியது பாதி 


சிரட்டை அளவு, உப்பு தேவையான அளவு, 


கருகப்பிலை, கடுகு, ஊறவைத்த புளி சிறிதளவு, 


வெள்ளை உடைச்ச உளுத்தம்பருப்பு, 


பெருங்காயத்தூள் சிறிதளவு, தேங்காய் 


எண்ணை இரண்டு மேஜைக்கரண்டி.   



செய்முறை ( METHOD) :-                                                   


முதலில் அனைத்து காய்கறிகளையும் நல்ல 


தண்ணீரில், நன்றாக தேய்த்து கழுவி சுத்தம் 


செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் 


உருளைக்கிழங்கை தோல் உரித்துக்கொண்டு 


அனைத்து காய்கறிகளையும் உங்களதுவிருப்பம் 


போல சிறுசிறுதுண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 


சிறிதுநேரம் ஊறவைத்து மீண்டும் நன்கு கழுவி 


சுத்தம் செய்தபின்னர் அதை வாணலியில் நல்ல 


தண்ணீரை ஊற்றி காய்கறிகளை அதில் போட்டு 


நன்கு வேக வைத்திட வேண்டும். நன்றாகஅந்தக் 


காய்கறிகள் நன்கு வெந்தபின்பு நீரை வடிகட்டி 


அதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மிக்சியில் 


துருவிய தேங்காய், சிறிதளவு சீரகம், தோல் 


உரித்த சின்ன வெங்காயம்,நான்கு முதல் ஐந்து 


பச்சைமிளகாய் இவைகளையும் போட்டு பின்னர் 


இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துமையாக 


அரைத்து விழுதுபோல எடுத்து வைத்துக்


கொள்ளவேண்டும்.  இப்போது மீண்டும் 


வாணலியை அடுப்பில் வைத்து அது 


சூடானவுடன் அதில் நல்லெண்ணெய் சிறிதளவு 


ஊற்றி அதன்பின்னர்  ஊற வைத்த புளியைக் 


கரைத்து அந்த சாறைஅதில் ஊற்றவும். 


(புளிச்சாறு ஊற்ற பிடிக்காதவர்கள் 


நன்கு புளிச்ச தயிரை ஊற்றலாம்) தேங்காய் 


விழுது காய்கறிகளுடன் நன்றாக 


ஒன்றிணைந்து கலந்தவுடன், தனியாகஇருக்கும் 


தாளிசத்தை ( கடுகு,வெள்ளை உடைச்ச பருப்பு, 


கருகப்பிலை இவைகள் சுத்தமான 


நல்லெண்ணெயில் தாளிச்சது )அதில் போட்டு 


அதன்பின் அதில் தேங்காய் எண்ணையை 


ஊற்றி, இந்த அவியல் கொதித்தவுடன் அடுப்பை 


அணைத்துவிடவும்.     


இப்போது சுவையான மலையாள அவியல் 


தயார்.                                                                                       


செய்து சாப்பிடவும்.                                                         


நன்றி !! வணக்கம் !!                                                           


அன்புடன் திருமலை,இரா.பாலு.                                     


(மதுரை T.R. பாலு )

புதன், 17 செப்டம்பர், 2014

கொத்தமல்லித் துவையல் செய்வது எப்படி ? விளக்கம் !!






           கொத்தமல்லித் துவையல் !!


               இதை செய்வது எப்படி ?              



செய்யத்தேவையான பொருட்கள் :-                         


 இளம் தளிரான கொத்தமல்லித் தளை 1 கட்டு, 


உடைச்ச உளுத்தம்பருப்பு சிறிதளவு, புளி 


சிறிதளவு, (காரத்திற்குத் தகுந்தபடி)


 மிளகாய் வற்றல் 2 லிருந்து 3 வரை, 


பெருங்காயத்தூள் சிறிதளவு, கருகப்பிலை 


இலை கொஞ்சம், தாளிக்க நல்ல எண்ணை 


சிறிதளவு, உப்பு தேவையான அளவு.                                                      


செய்முறை :-  ( METHOD OF PREPARATION )           


முதலில் இளம்தளிர் கொத்தமல்லித்தழையை 


நன்றாக அடிவேர் முதல் முனி இலை வரை 


மூன்று முறை நல்ல தண்ணீரில் கழுவிட 


வேண்டும். அதில் உள்ள மண் போன்ற 


பொருட்கள் அனைத்தையும் நீக்கிய பின்னர், 


வேரை  முழுவதுமாக வெட்டி நீக்கிடவேண்டும். 


நீர் முழுவதையும் வடித்துவிட்டு, வாணலியை 


அடுப்பில் வைத்து சூடானவுடன் அதில் 2 அல்லது 


3 கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதுவும் 


சூடான பின்பு அதில் பட்டை மிளகாய் 3 போட்டு 


நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒரு 


தட்டில் வைத்துக்கொள்ளவும். பிறகு அந்த 


எண்ணையில் உடைச்ச உளுத்தம்பருப்பை 


போட்டு அதை பொன்நிறமாக வறுத்தபின்னர் 


அதில் சிறிதளவு புளியை போட்டு அதையும் 


சேர்த்து வறுக்கவும். பிறகு அதில் சிறிதளவு 


பெருங்காயத் தூளைத் தூவி விடவும். அதன் 


பின்பு அதில் சிறிதளவு கருகப்பிலை 


இலைகளைப் போட்டு அதையும் பொரிய 


வறுத்திடவும். இவை அனைத்தையும் ஒரு 


தட்டில் வைத்து நன்றாக ஆறிடச் செய்திட 


வேண்டும். அதன் பின்னர் தண்ணீர் வடித்த 


கொத்தமல்லித்தழையை வாணலியில் வைத்து 


தண்ணீர் வற்றிட பிறட்டி எடுத்து வதக்கிடவும். 


பிறகு இதையும் ஆறிட வைக்க வேண்டும். இதன் 


பின்னர் இந்த கொத்தமல்லித் தழை,வறுத்து 


வைத்த மிளகாய் வற்றல் , புளித்துண்டு, 


ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் 


போட்டு நன்றாக மையாக அரைத்து கடைசியில் 


கருகப்பிலை இலை, உடைச்ச,வறுத்த உளுத்தம் 


பருப்பு இவற்றையும் போட்டு தேவையானஅளவு 


உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும். சுவையான 


கொத்தமல்லி துவையல் தயார்.                                   



நன்றி !! வணக்கம் !!


அன்புடன் சமையல்கலை நிபுணர்.                             


மதுரை T.R. பாலு.




 

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

நறுமணமுள்ள நெய்ப்பொங்கல் செய்வது எப்படி ?






           நறுமண நெய்ப்பொங்கல் !!





செய்யத் தேவையான பொருட்கள் :-



நயம் பொன்னி பச்சரிசி கால் படி, பாசிப்பருப்பு 


1௦௦ கிராம், முந்திரிபருப்பு 11, மிளகு 11. சீரகம் 


சிறிதளவு, இஞ்சி ஒரு சிறுதுண்டு, கருகப்பிலை 


சிறிது,மஞ்சள்பொடிசிறிதளவு,உப்புதேவையான 


அளவு, பெருங்காயத்தூள் சிறிது,நெய் 1௦௦ கிராம், 





செய்முறை (Method ):-   முதலில் வாணலியை 


அடுப்பில் வைத்து பற்றவைத்து சூடானவுடன் 


அதில் பாதி அளவுக்கு நெய் விட்டு அதில் 


முந்திரிப்பருப்பை போட்டு நன்றாக 


பொன்நிறமாக வறுத்து தனியே எடுத்து 


வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த 


வாணலியில் மீண்டும் சிறிதளவு நெய் ஊற்றி 


அது சூடானவுடன அதில் மிளகு, நறுக்கிய 


இஞ்சித்துண்டுகள்,சீரகம், சிறிதளவு 


பெருங்காயத்தூள், கருகப்பிலை ஆகியவை 


போட்டு, மிளகு வெடிக்கும் பக்குவம் வந்தவுடன் 


அடுப்பை அணைத்துவிடவும். அதன் பிறகு கால் 


படி பொன்னி அரிசி பச்சஅரிசியை நன்றாக 


களைந்து அதில் வறுத்து வைத்து பின்னர் 


ஆறவைத்த பாசிப்பருப்பையும் போட்டு, மீண்டும் 


நன்றாக நல்ல தண்ணீரில் அலசி நீரை சுத்தமாக 


வடித்துவிட்டு அதில் 2.3/4 பங்கு நல்ல தண்ணீரை 


விட்டு ஊறவைக்கவும். பின்னர் இந்த ஊறிய 


பச்சரிசி,பாசிப்பருப்பு கொண்ட நீரி கலந்ததை 


ஒரு நல்ல பாத்திரத்தில் வைத்து அதில் மிளகு, 


சீரகம், இஞ்சி,கருகப்பிலை ஆறவைத்திருந்ததை 


போட்டு தேவையான அளவு உப்பும், சிறிதளவு 


மஞ்சள் தூளும் போட்டு, நன்றாக அடிவரை 


கிண்டி கிளறியபின் குக்கரில் வைத்து 3 விசில் 


வரும்வரை காத்திருந்து, லேசான ஒழுகு தீயில் 


15 நிமிடங்கள்வரை வைக்க வேண்டும். 


அதன்பிறகு அடுப்பை அணைத்து விட்டு, ஆற 


வைக்க வேண்டும். அதன் பிறகு விசிலை 


எடுத்துவிட்டு, உள்ளே நன்கு வெந்த பொங்கலை 


வெளியில் எடுத்து நன்றாக கிளறி அதில் முந்திரி 


பருப்பையும் போட்டு நன்றாக நெய்யை ஊற்றி 


எடுத்துப் பரிமாறவும்.


இப்போதுநறுமணமுள்ளநெய்ப்பொங்கல்தயார் !!



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

சுவைமிகுந்த மிளகு ரசம் செய்வது எப்படி ?







   சுவைமிகுந்த மிளகு ரசம் செய்வது 


                              எப்படி ?                                 



தேவையான பொருட்கள் :-                 

(INGREDIENTS)


நயமான புளி நெல்லிக்காய் அளவு, 


மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், 


பெருங்காயத்தூள், மிளகுரசப்பொடி, 


காய்ந்த சம்பா மிளகாய் வற்றல் 8, 


கடுகு, வெள்ளைப்பூண்டு, 


பெருங்காயத்தூள் சிறிதளவு, 


நல்லெண்ணெய், கருகப்பிலை 


சிறிதளவு, கொத்தமல்லி இலையும் 


தண்டும் தேவையான அளவு, 1/2மூடி 


எலுமிச்சம்பழம்,உப்பு தேவையான 


அளவு.                                     


செய்முறை (METHOD OF PREPARING):-


முதலில் நெல்லிக்காய் அளவு 


புளியை எடுத்து அரை மணிநேரம் 


வரையில் நல்ல தண்ணீரில் ஊற 


வைத்திட வேண்டும். அதன் பிறகு 


அதனை நன்றாக கசக்கி 


புளிக்கரைசல் எடுத்து ஒரு 


பாத்திரத்தில் இடவேண்டும். அதன் 


பின் அந்தக் கரைசலில் தேவையான 


அளவு உப்பு,மஞ்சள்தூள் சிறிதளவு, 


மிளகாய்த்தூள் (காரம் தேவையான 


அளவுக்கு,)பெருங்காயத்தூள் 


சிறிதளவு, மிளகு ரசப்பொடி 3 


லிருந்து 5 கரண்டி, இவைகளைப்


போட்டு  மூடிட வேண்டும். 


அதற்குப் பிறகு அடுப்பை பற்ற 


வைத்து அதில்  வாணலியை இட்டு 


அது சூடானவுடன், அதில் 


நல்லெண்ணெய் சிறிதளவு இட்டு 


சூடானவுடன் அதில் கடுகுபோட்டு 


நன்றாக பொரிந்தவுடன் அதில் 


கருகப்பிலையைப்போட்டு அது 


நன்றாக வதங்கியவுடன் அதில் 6 


லிருந்து 7 காய்ந்த சம்பா மிளகாய் 


வற்றலை போட்டு நன்றாக 


வதக்கவும். அதன்பின்னர் நாம் 


ஏற்கனவே மிக்சியில் வைத்து 


பேஸ்ட் போல செய்து வைத்துள்ள 5 


வெள்ளைப்பூண்டு பற்களை அதன் 


கரைசலை வாணலியில் இட்டு 


நன்றாக வதங்கி, பச்சை வாடை 


போன பிறகு ,இந்த நிகழ்வுகள் 


அனைத்தும் முடிந்த பிறகு, 


கரைத்துவைத்துள்ள 


புளி&மிளகுரசப்பொடிக்கரைசலை 


வாணலியில் இடவும். நன்கு சூடாகி 


பொங்கி வரும்போது ( தயவு செய்து 


இந்தக் கரைசலை கொதிநிலை 


வரும்வரை செய்திட வேண்டாம் 


பிறகு அதன் ருசியும் மணமும் 


கெட்டுவிடும்.)   அதன் பின்னர் 


ஒரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி 


ஜீனியை போட்டு அதில் இந்த ரசம் 


கொதித்த கலவையை அந்தப் 


பாத்திரத்தில் ஊற்றி,  அதில் 1/2 மூடி 


எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதன் 


பிறகு அதில் ஏற்கனவே நாம்நறுக்கி 


வைத்திருந்த கொத்தமல்லி 


இலையையும் தண்டுகளையும் 


போட்டு ஒரு கலக்கு கலக்கி உப்பு 


பார்த்து எடுத்து பரிமாறவும். 



சுவையும் மணமும் மிகுந்த மிளகு 


ரசம் தயார்.                                                   


நன்றி !! வணக்கம் !!                                   


அன்புமிகுந்த                                                   


சுவையான சமையல் கலை நிபுணர், 


மதுரை T.R. பாலு.

மிளகு இரசப்பொடி செய்வது எப்படி ? !!





மிளகு இரசப்பொடி செய்வது எப்படி ?

செய்யத் தேவையான பொருட்கள் :-

(INGREDIENTS)


நல்ல மிளகு இரண்டு மேசைக்கரண்டி,


சீரகம் ஒரு மேசைக்கரண்டி, மல்லிவிதை


இரண்டு மேசைக்கரண்டி, சம்பாவற்றல் எட்டு,


துவரம்பருப்பு இரண்டு மேசைக்கரண்டி,


வெள்ளைப்பூண்டு பல் மூன்று,



செய்முறை (METHOD OF PREPARING):-
முதலில் மேலேகுறிப்பிட்டுள்ளபடி மிளகு,


சீரகம்,மல்லி விதை,துவரம்பருப்பு, சம்பா


மிளகாய்வற்றல்,வெள்ளைப்பூண்டு, இவைகளை


மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பிருபிருவென


அரைத்து பொடியாக ஆக்கி எடுத்து ஒரு


ஜாடியில் வைத்துக்கொள்ளவும். இப்போது


சுவைமிகுந்த மிளகு ரசப்பொடி தயார்.                       



நன்றி !! வணக்கம் !!                                                           


இப்படிக்கு,                                                                                   

சுவைமிகு சமையல் நிபுணர்,                                           


மதுரை T.R. பாலு.

சனி, 26 ஜூலை, 2014

கத்திரிக்காய் கிச்சடி !! அதனை செய்வது எப்படி ?








கத்திரிக்காய் கிச்சடி !! 


அதனை  செய்வது எப்படி !!

செய்யத்தேவையான பொருட்கள் :-  

1/2 கிலோ நல்ல கண்மாய்க் கத்திரிக்காய்,

பச்சை மிளகாய் 9, பெரிய வெங்காயம் 1/2 Kg,

புளி சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, 

கருகப்பிலை சிறிதளவு, சிவப்பு மிளகாய், 

நல்லெண்ணெய் கொஞ்சம், உப்பு தேவையான 

அளவு.                                                                                         


செய்முறை ( METHOD ) :-


சிறிதளவு புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து நன்றாக 


சூடானதும் அதில்ஐந்துகரண்டிநல்லெண்ணெய் 


ஊற்றி அது சூடானபின்பு, அதில் நன்றாக நறுக்கி 


வைத்தபச்சை மிளகாய்களை வதக்கவும். பிறகு 


பெரியவெங்காயத்துண்டுகளைப்போட்டு,


நன்கு பொன்நிறமாகவதங்கியவுடன்கண்மாய்க் 


கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.  


அப்போது இதற்குத் தேவையான அளவு உப்பும், 


கொஞ்சம் பெருங்காயத்தூளையும்  போடவும். 


பெரிய வெங்காயமும், கத்திரிக்காய் இவை 


நன்றாக வதங்கியவுடன், அதில் ஊறவைத்த 


புளியை நன்கு கரைத்து, இந்தக் கரைசலை 


வதங்கிய வெங்காயம்,கத்திரிக்காய் இதில் 


தெளிக்கவும், பிறகு இவை இரண்டும் நன்றாக 


மூழ்கும் வண்ணம், நல்ல தண்ணீரை ஊற்றவும். 


நன்றாக கொதிக்கவிடவும். கொதித்து நன்கு 


வெந்தவுடன், ஒரு கண் உள்ள பாத்திரத்தில் 


கொட்டி வடிகட்டவும். பிறகு நன்றாக ஆற 


வைக்கவும்.ஆறிய பின்பு வேகவைத்த 


வெங்காயம், கத்திரிக்காய் இவைகளை 


மிக்சியில் போட்டு நன்றாக மை போல 


மசித்து அரைத்து எடுக்கவும். அதன்பிறகு, 


மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடான 


பிறகு, அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, 


அது சூடானவுடன், அதில் கடுகு போட்டு நன்கு 


பொரிந்தவுடன், அதில் உடைச்ச வெள்ளை 


உளுந்து போட்டு, அது பொன் நிறமாக ஆனபின்பு 


அதில் கருகப்பிலை கொஞ்சம்போட்டு, பின்பு 3 


முதல் 5 சிவப்பு சம்பா வற்றலை பிச்சு போட்டு 


அதன் பிறகு நறுக்கிவத்த வெங்காயத்தை 


போட்டு, வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், 


மிக்சியில் உள்ள (கத்திரி +வெங்காயம் ) கூழை


வாணலியில் ஊற்றி, ஏற்கனவேவடிகட்டிவைத்த 


தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க வைத்து 


பின் உப்பு பார்த்து கத்திரிக்காய் கிச்சடியை 


இறக்கி வைத்து பரிமாறவும். 


சுவையான கத்திரிக்காய் கிச்சடி 


                 தயார்.


சாப்பிட்டு பார்த்து, எனக்கு பதில் அனுப்புங்கள். 


பதில் அனுப்பி வைக்கும் ஒவ்வொருவருக்கும் 


விலைமதிப்பில்லாதபரிசுஒன்று காத்திருக்கிறது. 


பதில் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி :- 


astrobalu1954@gmail.com 


நன்றி  !!  வணக்கம் !!                                                             


அன்புடன் மதுரை T.R. பாலு.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

மணக்கும் மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி ?






**************************************************************************************

     மணக்கும்மல்லிகைப் பூ இட்லி !!              


             செய்திட வழிவகைகள் !!             

********************************************************************************



செய்யத்தேவையான பொருட்கள் :- 


1)  நல்ல தரமான இட்லி அரிசி 1/2 படி. 


2) உதயம் பிராண்டு உருட்டு உளுந்து 

1/8 படி.                                                                 


3) கல் உப்பு = ஒரு கைப்பிடி முழுதும்.


செய்முறை (METHOD):-                             


முதலில் இட்லி அரிசி, மற்றும் 


உதயம் உருட்டு உளுந்து, 


இவைகளை மேலே குறிப்பிட்ட 


அளவு அளந்து ஒரு பாத்திரத்தில் 


வைத்து அதன்மீது நன்றாக 


மூழ்கிடும் வண்ணம் சுத்தமான 


நல்ல தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் 


முதல் 3.1/2 மணி நேரம் வரை ஊற 


வைத்திட வேண்டும். அதன்பின்னர் 


முதலில் நன்றாக ஊறிய உருட்டு 


உளுந்தை 3 முறை நன்றாக கழுவி 


சுத்தம் செய்த பின்னர் கிரைண்டரில் 


போட்டு அரைய, அரைய, கொஞ்சம் 


கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 


(நிறைய தண்ணீர் ஊற்றினால் 


உளுந்து மாவு பொங்காமல் 


போய்விடும். இட்லி மெதுவாக 


இருக்காது)நன்கு பொங்கப்பொங்க 


அரைத்து வழித்து வைத்துக் 


கொள்ளவும். அதன்பிறகு 


ஊறியஅரிசியைஅதே கிரைண்டரில் 


நன்றாக மையாக தண்ணீர் ஊற்றி 


ஊற்றி அரைத்து (அளவுடன் 


தண்ணீர் ஊற்றவும். கட்டியாக, 


நன்றாக, நைசாக அரைத்துக் 


கொண்டால் மிகவும் 


நல்லது)அதையும், வழித்து 


வைத்துள்ள, உளுந்துமாவோடு 


சேர்த்து, அதன்பின் கல்உப்பு ஒரு 


கைப்பிடி நிறைய, போட்டு நன்றாக, 


இரண்டையும் கலந்து, அழுத்தி  


பிசைந்திடவும். இதை ஒரு பெரிய 


பாத்திரம் ஒன்றினில் வைத்து இரவு 


முழுதும் மூடி போட்டு மூடி வைத்து 


புளித்திடச் செய்திட வேண்டும். 


அதன் பிறகு காலையில் எழுந்து 


பாத்திரத்தில் நன்றாக பொங்கிய 


மாவினை கரண்டி வைத்து நன்றாக 


அடிமுதல் மேல் வரை  கலக்கியபின் 


இட்லி செய்திடும் கண் தட்டில் துணி 


விரித்துஅவித்துஎடுத்து வைக்கவும். 


இப்போது சுவை மிகுந்த மணக்கும்


மல்லிகைப்பூ இட்லி தயார்.                     


செய்துபார்த்து எப்படி இருந்தது 


என்பதை எனது கீழ்க்கண்ட மின்-


அஞ்சலில் தெரிவிக்கவும்.                       


astrobalu1954@gmail.com                                 


நன்றி !! வணக்கம் !!                                   


அன்புடன்,                                                         


SHEAF. மதுரை T.R. பாலு.

சனி, 5 ஜூலை, 2014

மல்லிகைப் பூப்போல மிகவும் மெல்லிய, மிருதுவான இட்லி வேண்டுமா உங்களுக்கு ? படியுங்கள் இதனை !!






"  என் சமையல் அறையில்  "... ... ... ...   


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!            


அனைவருக்கும் எனது இனிய 


காலை வணக்கங்கள். இன்றைய 


தினம், நம்மில் உள்ளவர்களில் 


மிகப்பெரும்பான்மையோர் 


அவர்களது இல்லங்களில், இட்லி 


எனப்படும் காலை உணவின் 


கதாநாயகன், அவ்வளவு 


மெதுவாகவோ, அல்லது 


நிறமாகவோ, இருப்பதென்பது 


இல்லை. 



இதற்கு என்ன காரணம் ? இதனை 


எப்படி நாம் சரி செய்து 


கட்டுரைதனில் குறிப்பிட்டுஉள்ளபடி 


மணக்கும் மல்லிகைப் பூப்போல 


மிகவும் மெல்லிய, மிருதுவான 


இட்லி தயாரிப்பது, என்பதை 


விளக்கத்துடன் உங்களுக்குத் 


தெரிவிப்பதே இந்தக் கட்டுரையின் 


மூல காரணம் ஆகும்.                             


இட்லி பெரும்பான்மையோர் 


வீடுகளில் கல்லு போல இருக்க 


காரணம் :-                                                       


1)  நல்ல தரமான, இட்லி அரிசி, 


உருட்டு உளுந்து பயன்படுத்தாது 


இருப்பது முழுமுதல் காரணம்.             


2)  தேவையான நேரம் மேலே 


சொன்ன அரிசி மற்றும் உளுந்து 


இவைகளை குளிர்ந்த நீரினில் 


குறிப்பிட்ட நேரம் வரை ஊற 


வைக்காது இருப்பது.                                   


3)  அரைப்பதற்கு முன்னர் 


இவைகளை நன்றாக மூன்றுமுறை 


அலசி நீரினில் கழுவி சுத்தம் 


செய்திடாமல் அப்படியே 


அரைத்துவிடுவது.                                       


அன்பர்களே !!                                               


மேலேசொன்ன மூன்றுகாரணங்கள் 


தான் வீடுகளில் இட்லி கல்லு போல 


இருந்திட காரணம்.       சரி !! அப்படி 


என்றால் இதனை எப்படி நாம் சரி 


செய்வது ?                                   


அனபர்களே !!                                               


அந்த இரகசியத்தை உங்களுக்குத் 


தெரிவிப்பதற்குத்தான் 


இன்றையதினம் 


"  எனது சமையல் அறையில்  ".... 


என்னும் இந்த அரிய சமூக 


வலைதளம் உங்களுக்கு படம் 


பிடித்துக் காட்டிட இருக்கிறது. 


ஆனால் அதனை நீங்கள் தெரிந்து 


கொள்வதற்கு முன்பாக, ஒரு சிறிய 


இடைவேளை !!   


கூடிய விரைவினில் நாம் 


சந்திப்போம்.    



நன்றி !! வணக்கம் !!                                 



SHEAF மதுரை T.R. பாலு. 

சனி, 28 ஜூன், 2014

வறுத்து அரைச்ச துவையல் செய்வது எப்படி ?







       வறுத்து அரைச்ச துவையல் !!





செய்யத் தேவையான பொருட்கள் :-



தேங்காய் பூவாகத் துருவியது 1 கப்,


உடைச்ச உளுத்தம்பருப்பு, மிளகாய் 


வற்றல் 7, பெருங்காயத்தூள்,புளி,உப்பு,


கருகப்பிலை, நல்லெண்ணெய் சிறிதளவு.




செய்முறை :-  அடுப்பில் வாணலியை வைத்து 


நன்றாகசூடானவுடன்,கொஞ்சம்நல்லெண்ணெய் 

3 கரண்டி ஊற்றி அதில் மிளகாய் வற்றலை 


போட்டு, கருகிவிடாமல்வறுத்துஎடுத்துவைத்துக் 


கொள்ளவும். பிறகு அதில்வாணலியில்)இன்னும் 


கொஞ்சம்நல்லெண்ணெய்ஊற்றிஅதில்உடைச்ச 


உளுந்து, புளி சிறிய துண்டு, பெருங்காயத்தூள் 


சிறிதளவு,கருகப்பிலை சிறிதளவு போட்டு 


லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 


அதன் பிறகு வாணலியில் 1 கப் தேங்காய் நன்கு 


துருவியதைப்போட்டு, பொன் நிறமாக வறுத்து 


எடுத்துவைத்துக்கொள்ளவும். வறுத்து 


வைத்துள்ள பொருட்கள்அனைத்தும்நன்றாகசூடு 


ஆறியதன் பின்னர், மிச்சியில் தேங்காய்ப்பூ, 7 


மிளகாய் வற்றல்,புளி ஆகியவற்றை போட்டு 


தண்ணீர் சிறிதளவு இட்டு, நன்றாக பிறுபிறுஎன 


அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர் இதில் 


வறுத்த உடைச்ச உளுத்தம்பருப்பு,கருகப்பிலை, 


ஆகியவற்றையும் சேர்த்து, தேவையான அளவு 


உப்பு சேர்த்து, மையாக அரைச்சு எடுத்து 


பரிமாறவும்.



இப்போது சுவையானவறுத்துஅரைச்சதுவையல் 


தயார். இதைக் கைபடாமல் பரிமாறினால், 


ஒன்றிரண்டு நாட்கள் வரையிலும் பிரிஜ்ஜில் 


வைத்து சாப்பிடலாம்.



மீண்டும் எமது அடுத்த என் சமையல் அறையில் 


பதிவில் சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.