சனி, 26 ஜூலை, 2014

கத்திரிக்காய் கிச்சடி !! அதனை செய்வது எப்படி ?








கத்திரிக்காய் கிச்சடி !! 


அதனை  செய்வது எப்படி !!

செய்யத்தேவையான பொருட்கள் :-  

1/2 கிலோ நல்ல கண்மாய்க் கத்திரிக்காய்,

பச்சை மிளகாய் 9, பெரிய வெங்காயம் 1/2 Kg,

புளி சிறிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, 

கருகப்பிலை சிறிதளவு, சிவப்பு மிளகாய், 

நல்லெண்ணெய் கொஞ்சம், உப்பு தேவையான 

அளவு.                                                                                         


செய்முறை ( METHOD ) :-


சிறிதளவு புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.


வாணலியை அடுப்பில் வைத்து நன்றாக 


சூடானதும் அதில்ஐந்துகரண்டிநல்லெண்ணெய் 


ஊற்றி அது சூடானபின்பு, அதில் நன்றாக நறுக்கி 


வைத்தபச்சை மிளகாய்களை வதக்கவும். பிறகு 


பெரியவெங்காயத்துண்டுகளைப்போட்டு,


நன்கு பொன்நிறமாகவதங்கியவுடன்கண்மாய்க் 


கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.  


அப்போது இதற்குத் தேவையான அளவு உப்பும், 


கொஞ்சம் பெருங்காயத்தூளையும்  போடவும். 


பெரிய வெங்காயமும், கத்திரிக்காய் இவை 


நன்றாக வதங்கியவுடன், அதில் ஊறவைத்த 


புளியை நன்கு கரைத்து, இந்தக் கரைசலை 


வதங்கிய வெங்காயம்,கத்திரிக்காய் இதில் 


தெளிக்கவும், பிறகு இவை இரண்டும் நன்றாக 


மூழ்கும் வண்ணம், நல்ல தண்ணீரை ஊற்றவும். 


நன்றாக கொதிக்கவிடவும். கொதித்து நன்கு 


வெந்தவுடன், ஒரு கண் உள்ள பாத்திரத்தில் 


கொட்டி வடிகட்டவும். பிறகு நன்றாக ஆற 


வைக்கவும்.ஆறிய பின்பு வேகவைத்த 


வெங்காயம், கத்திரிக்காய் இவைகளை 


மிக்சியில் போட்டு நன்றாக மை போல 


மசித்து அரைத்து எடுக்கவும். அதன்பிறகு, 


மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடான 


பிறகு, அதில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, 


அது சூடானவுடன், அதில் கடுகு போட்டு நன்கு 


பொரிந்தவுடன், அதில் உடைச்ச வெள்ளை 


உளுந்து போட்டு, அது பொன் நிறமாக ஆனபின்பு 


அதில் கருகப்பிலை கொஞ்சம்போட்டு, பின்பு 3 


முதல் 5 சிவப்பு சம்பா வற்றலை பிச்சு போட்டு 


அதன் பிறகு நறுக்கிவத்த வெங்காயத்தை 


போட்டு, வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், 


மிக்சியில் உள்ள (கத்திரி +வெங்காயம் ) கூழை


வாணலியில் ஊற்றி, ஏற்கனவேவடிகட்டிவைத்த 


தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க வைத்து 


பின் உப்பு பார்த்து கத்திரிக்காய் கிச்சடியை 


இறக்கி வைத்து பரிமாறவும். 


சுவையான கத்திரிக்காய் கிச்சடி 


                 தயார்.


சாப்பிட்டு பார்த்து, எனக்கு பதில் அனுப்புங்கள். 


பதில் அனுப்பி வைக்கும் ஒவ்வொருவருக்கும் 


விலைமதிப்பில்லாதபரிசுஒன்று காத்திருக்கிறது. 


பதில் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி :- 


astrobalu1954@gmail.com 


நன்றி  !!  வணக்கம் !!                                                             


அன்புடன் மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக