புதன், 17 செப்டம்பர், 2014

கொத்தமல்லித் துவையல் செய்வது எப்படி ? விளக்கம் !!






           கொத்தமல்லித் துவையல் !!


               இதை செய்வது எப்படி ?              



செய்யத்தேவையான பொருட்கள் :-                         


 இளம் தளிரான கொத்தமல்லித் தளை 1 கட்டு, 


உடைச்ச உளுத்தம்பருப்பு சிறிதளவு, புளி 


சிறிதளவு, (காரத்திற்குத் தகுந்தபடி)


 மிளகாய் வற்றல் 2 லிருந்து 3 வரை, 


பெருங்காயத்தூள் சிறிதளவு, கருகப்பிலை 


இலை கொஞ்சம், தாளிக்க நல்ல எண்ணை 


சிறிதளவு, உப்பு தேவையான அளவு.                                                      


செய்முறை :-  ( METHOD OF PREPARATION )           


முதலில் இளம்தளிர் கொத்தமல்லித்தழையை 


நன்றாக அடிவேர் முதல் முனி இலை வரை 


மூன்று முறை நல்ல தண்ணீரில் கழுவிட 


வேண்டும். அதில் உள்ள மண் போன்ற 


பொருட்கள் அனைத்தையும் நீக்கிய பின்னர், 


வேரை  முழுவதுமாக வெட்டி நீக்கிடவேண்டும். 


நீர் முழுவதையும் வடித்துவிட்டு, வாணலியை 


அடுப்பில் வைத்து சூடானவுடன் அதில் 2 அல்லது 


3 கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதுவும் 


சூடான பின்பு அதில் பட்டை மிளகாய் 3 போட்டு 


நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒரு 


தட்டில் வைத்துக்கொள்ளவும். பிறகு அந்த 


எண்ணையில் உடைச்ச உளுத்தம்பருப்பை 


போட்டு அதை பொன்நிறமாக வறுத்தபின்னர் 


அதில் சிறிதளவு புளியை போட்டு அதையும் 


சேர்த்து வறுக்கவும். பிறகு அதில் சிறிதளவு 


பெருங்காயத் தூளைத் தூவி விடவும். அதன் 


பின்பு அதில் சிறிதளவு கருகப்பிலை 


இலைகளைப் போட்டு அதையும் பொரிய 


வறுத்திடவும். இவை அனைத்தையும் ஒரு 


தட்டில் வைத்து நன்றாக ஆறிடச் செய்திட 


வேண்டும். அதன் பின்னர் தண்ணீர் வடித்த 


கொத்தமல்லித்தழையை வாணலியில் வைத்து 


தண்ணீர் வற்றிட பிறட்டி எடுத்து வதக்கிடவும். 


பிறகு இதையும் ஆறிட வைக்க வேண்டும். இதன் 


பின்னர் இந்த கொத்தமல்லித் தழை,வறுத்து 


வைத்த மிளகாய் வற்றல் , புளித்துண்டு, 


ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் 


போட்டு நன்றாக மையாக அரைத்து கடைசியில் 


கருகப்பிலை இலை, உடைச்ச,வறுத்த உளுத்தம் 


பருப்பு இவற்றையும் போட்டு தேவையானஅளவு 


உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும். சுவையான 


கொத்தமல்லி துவையல் தயார்.                                   



நன்றி !! வணக்கம் !!


அன்புடன் சமையல்கலை நிபுணர்.                             


மதுரை T.R. பாலு.




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக