புதன், 12 நவம்பர், 2014

மலையாள அவியல் செய்வது எப்படி ? அது இப்படி !!









               மலையாள  அவியல்.                   


தேவையான பொருட்கள் :- வாழைக்காய் = 1, 


கத்திரிக்காய் கால் கிலோ, பெரிய உருளைக் 


கிழங்கு = 1, பீன்ஸ், காரட், அவரை,பச்சைப் 


பட்டாணி மொத்தம் 300 கிராம் ,  முருங்கைக்காய் 


2,சின்ன வெங்காயம் 100 கிராம் , சீரகம் சிறிதளவு, 


பச்சை மிளகாய் 5, தேங்காய் துருவியது பாதி 


சிரட்டை அளவு, உப்பு தேவையான அளவு, 


கருகப்பிலை, கடுகு, ஊறவைத்த புளி சிறிதளவு, 


வெள்ளை உடைச்ச உளுத்தம்பருப்பு, 


பெருங்காயத்தூள் சிறிதளவு, தேங்காய் 


எண்ணை இரண்டு மேஜைக்கரண்டி.   



செய்முறை ( METHOD) :-                                                   


முதலில் அனைத்து காய்கறிகளையும் நல்ல 


தண்ணீரில், நன்றாக தேய்த்து கழுவி சுத்தம் 


செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் 


உருளைக்கிழங்கை தோல் உரித்துக்கொண்டு 


அனைத்து காய்கறிகளையும் உங்களதுவிருப்பம் 


போல சிறுசிறுதுண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 


சிறிதுநேரம் ஊறவைத்து மீண்டும் நன்கு கழுவி 


சுத்தம் செய்தபின்னர் அதை வாணலியில் நல்ல 


தண்ணீரை ஊற்றி காய்கறிகளை அதில் போட்டு 


நன்கு வேக வைத்திட வேண்டும். நன்றாகஅந்தக் 


காய்கறிகள் நன்கு வெந்தபின்பு நீரை வடிகட்டி 


அதை ஒரு பாத்திரத்தில் வைக்கவும். மிக்சியில் 


துருவிய தேங்காய், சிறிதளவு சீரகம், தோல் 


உரித்த சின்ன வெங்காயம்,நான்கு முதல் ஐந்து 


பச்சைமிளகாய் இவைகளையும் போட்டு பின்னர் 


இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துமையாக 


அரைத்து விழுதுபோல எடுத்து வைத்துக்


கொள்ளவேண்டும்.  இப்போது மீண்டும் 


வாணலியை அடுப்பில் வைத்து அது 


சூடானவுடன் அதில் நல்லெண்ணெய் சிறிதளவு 


ஊற்றி அதன்பின்னர்  ஊற வைத்த புளியைக் 


கரைத்து அந்த சாறைஅதில் ஊற்றவும். 


(புளிச்சாறு ஊற்ற பிடிக்காதவர்கள் 


நன்கு புளிச்ச தயிரை ஊற்றலாம்) தேங்காய் 


விழுது காய்கறிகளுடன் நன்றாக 


ஒன்றிணைந்து கலந்தவுடன், தனியாகஇருக்கும் 


தாளிசத்தை ( கடுகு,வெள்ளை உடைச்ச பருப்பு, 


கருகப்பிலை இவைகள் சுத்தமான 


நல்லெண்ணெயில் தாளிச்சது )அதில் போட்டு 


அதன்பின் அதில் தேங்காய் எண்ணையை 


ஊற்றி, இந்த அவியல் கொதித்தவுடன் அடுப்பை 


அணைத்துவிடவும்.     


இப்போது சுவையான மலையாள அவியல் 


தயார்.                                                                                       


செய்து சாப்பிடவும்.                                                         


நன்றி !! வணக்கம் !!                                                           


அன்புடன் திருமலை,இரா.பாலு.                                     


(மதுரை T.R. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக