ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

சுவைமிகுந்த மிளகு ரசம் செய்வது எப்படி ?







   சுவைமிகுந்த மிளகு ரசம் செய்வது 


                              எப்படி ?                                 



தேவையான பொருட்கள் :-                 

(INGREDIENTS)


நயமான புளி நெல்லிக்காய் அளவு, 


மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், 


பெருங்காயத்தூள், மிளகுரசப்பொடி, 


காய்ந்த சம்பா மிளகாய் வற்றல் 8, 


கடுகு, வெள்ளைப்பூண்டு, 


பெருங்காயத்தூள் சிறிதளவு, 


நல்லெண்ணெய், கருகப்பிலை 


சிறிதளவு, கொத்தமல்லி இலையும் 


தண்டும் தேவையான அளவு, 1/2மூடி 


எலுமிச்சம்பழம்,உப்பு தேவையான 


அளவு.                                     


செய்முறை (METHOD OF PREPARING):-


முதலில் நெல்லிக்காய் அளவு 


புளியை எடுத்து அரை மணிநேரம் 


வரையில் நல்ல தண்ணீரில் ஊற 


வைத்திட வேண்டும். அதன் பிறகு 


அதனை நன்றாக கசக்கி 


புளிக்கரைசல் எடுத்து ஒரு 


பாத்திரத்தில் இடவேண்டும். அதன் 


பின் அந்தக் கரைசலில் தேவையான 


அளவு உப்பு,மஞ்சள்தூள் சிறிதளவு, 


மிளகாய்த்தூள் (காரம் தேவையான 


அளவுக்கு,)பெருங்காயத்தூள் 


சிறிதளவு, மிளகு ரசப்பொடி 3 


லிருந்து 5 கரண்டி, இவைகளைப்


போட்டு  மூடிட வேண்டும். 


அதற்குப் பிறகு அடுப்பை பற்ற 


வைத்து அதில்  வாணலியை இட்டு 


அது சூடானவுடன், அதில் 


நல்லெண்ணெய் சிறிதளவு இட்டு 


சூடானவுடன் அதில் கடுகுபோட்டு 


நன்றாக பொரிந்தவுடன் அதில் 


கருகப்பிலையைப்போட்டு அது 


நன்றாக வதங்கியவுடன் அதில் 6 


லிருந்து 7 காய்ந்த சம்பா மிளகாய் 


வற்றலை போட்டு நன்றாக 


வதக்கவும். அதன்பின்னர் நாம் 


ஏற்கனவே மிக்சியில் வைத்து 


பேஸ்ட் போல செய்து வைத்துள்ள 5 


வெள்ளைப்பூண்டு பற்களை அதன் 


கரைசலை வாணலியில் இட்டு 


நன்றாக வதங்கி, பச்சை வாடை 


போன பிறகு ,இந்த நிகழ்வுகள் 


அனைத்தும் முடிந்த பிறகு, 


கரைத்துவைத்துள்ள 


புளி&மிளகுரசப்பொடிக்கரைசலை 


வாணலியில் இடவும். நன்கு சூடாகி 


பொங்கி வரும்போது ( தயவு செய்து 


இந்தக் கரைசலை கொதிநிலை 


வரும்வரை செய்திட வேண்டாம் 


பிறகு அதன் ருசியும் மணமும் 


கெட்டுவிடும்.)   அதன் பின்னர் 


ஒரு பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி 


ஜீனியை போட்டு அதில் இந்த ரசம் 


கொதித்த கலவையை அந்தப் 


பாத்திரத்தில் ஊற்றி,  அதில் 1/2 மூடி 


எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதன் 


பிறகு அதில் ஏற்கனவே நாம்நறுக்கி 


வைத்திருந்த கொத்தமல்லி 


இலையையும் தண்டுகளையும் 


போட்டு ஒரு கலக்கு கலக்கி உப்பு 


பார்த்து எடுத்து பரிமாறவும். 



சுவையும் மணமும் மிகுந்த மிளகு 


ரசம் தயார்.                                                   


நன்றி !! வணக்கம் !!                                   


அன்புமிகுந்த                                                   


சுவையான சமையல் கலை நிபுணர், 


மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக