செவ்வாய், 24 நவம்பர், 2015

சுவைமிகுந்த பாசிப்பருப்பு சாம்பார் (இட்லி,தோசைக்கு) செய்வது எப்படி ?








                 பாசிப்பருப்பு சாம்பார் !!
                        ( இட்லி மற்றும் தோசைக்கு )



செய்யத் தேவையானவை:-

உருளைக்கிழங்கு ஒன்று, தக்காளி ஒன்று,

பச்சைமிளகாய் 6, காரட் ஒன்று, பெரிய 

வெங்காயம் ஒன்று, சிறிய வெங்காயம் 6,

கொத்தமல்லி & கருகப்பிலை தேவையான 

அளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, மிளகாய் 

தூள் 3 மேஜைக்கரண்டி, மஞ்சள் தூள் 1 மேசைக் 

கரண்டி, பாசிப்பருப்பு ஒரு கை அளவு, கடுகு,

உளுத்தம்பருப்பு, 3 சிவப்பு மிளகாய் ( தாளிக்க)

உப்பு தேவையான அளவு,எண்ணைதேவையான 

அளவு.


செய்முறை :-

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தக்காளி, 

உருளைக்கிழங்கைதோலைசீவியபின்பு  

நறுக்க வேண்டும்,பச்சைமிளகாய், காரட் , பெரிய 

மற்றும் சிறிய வெங்காயம் இவைகளை நறுக்கி 

வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு  ஒரு 

பாத்திரத்தில் பாதி அளவிற்கு சற்றுக் குறைவாக 

நல்ல தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 

மேலே சொன்ன மூன்று மேஜைக்கரண்டி 

மிளகாய்த் தூள், ஒரு கரண்டி மஞ்சள் தூள், 

சிறிதளவு பெருங்காயத்தூள் 

இவைகளைப்போட்டு, 

அதில் ஒரு கையளவு பாசிப்பருப்பு, 

கருகப்பிலை,கொத்தமல்லி ஆகியவைகளையும் 

போட்டு,நன்றாக கலக்கியபின்பு அதில் நறுக்கி 

வைத்த காய்கறிகளை போடவும் பின் இதை மூடி 

ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அது 

நன்குகொதித்த பின்பு இந்த பாத்திரத்தை அந்த 

பிரஷர் குக்கரில் வைத்து, குக்கரில் இருந்து 

இரண்டு விசில் சத்தம் வந்தபின்பு காஸ் 

அடுப்பினை குறைவான வெப்பத்தில் சுமார் 15 

நிமிடம் வைத்த பின்பு, அடுப்பை அனைத்து 

விடவும். குக்கர் நன்றாக ஆறியபின்பு, 

அதைத்திறந்து அதில் உள்ள பாத்திரத்தை 

வெளியே எடுத்து அதன் பின்னர் மட்டுமே 

தேவையான அளவு உப்பு போடவேண்டும்.

அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து 

அது சூடானபிறகு அதில் கடுகு,உளுத்தம்பருப்பு,

போட்டுநன்குபொரிந்தவுடன்,அதில்கருகப்பிலை,

மற்றும் சிவப்பு மிளகாய் மூன்று ஆகியவற்றை 

போட்டு அதில், பாத்திரத்தில் உள்ள பாசிப்பருப்பு,

காய்கறி கலவைகளை போட்டு, நன்றாக 

கொதிக்க விட்டு, உப்பு சரி பார்த்து இறக்கினால் 

சுவைமிகுந்த பாசிப்பருப்பு சாம்பார் தயார்.

நன்றி !! வணக்கம் !!

செப். திருமலை.இரா.பாலு.


வெள்ளி, 13 நவம்பர், 2015

சுசி சட்னி செய்வது எப்படி ?





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!




                         சுசி சட்னி 



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம். தினசரி நமது 
காலை உணவில் இட்லி, தோசைக்கு,
தேங்காய் சட்னி, பச்சைமிளகாய் சேர்த்தும் 
சிவப்பு மிளகாய் சேர்த்தும் சாப்பிட்டு,சாப்பிட்டு 
அலுத்துசலித்துப் போனவர்கள், கீழே கண்ட 
சுசி சட்னியை அரைத்து சாப்பிட்டால் அதன் 
சுவை அறிந்து அதன் பின்பு நீங்க தேங்காய் சட்னி வேண்டவே வேண்டாம்ன்னுசொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.

என்ன....நான்..சொல்றது..செஞ்சு பாருங்க..
சாப்பிட்டுப்பார்த்திட்டு பிறகு சொல்லுங்க....

நன்றி.வணக்கம்.

அன்புடன். செF. திருமலை.இரா.பாலு.
******************************************************

சுசி சட்னி செய்யத் தேவையானவை :-

பெரியவெங்காயம் 2, தக்காளி 1 (நடுத்தர அளவு ),

பச்சைமிளகாய் 5, பெருங்காயத்தூள் சிறிதளவு,

உடைச்ச உளுத்தம்பருப்பு தாளிக்க, உப்பு மற்றும் 

எண்ணை தேவையான அளவு.


செய்முறை :-  (Method of cooking )

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அது 

சூடானவுடன் அதில் சிறிதளவு டபுள் ரீபைண்டு 

எண்ணையை ஊற்றவும். பின் அதில் உடைச்ச 

உளுந்து மற்றும் சிறிது பெருங்காயத் தூளை 

தூவி, உளுந்து பொன்னிறமானவுடன் அதனை 

தனியாக ஒரு சிறிய தட்டில் எடுத்து வைத்துக்

கொள்ள வேண்டும். பின்னர் அந்த வாணலியில் 

உள்ள சூடான எண்ணையில் ஏற்கனவே நறுக்கி 

வைத்துள்ள பச்சை மிளகாய் 5ஐ அதன் 

பச்சை நிறம் மாறிடும் வரை வதக்கியவுடன் 

அதில்  நறுக்கிவைத்த  இரண்டு பெரிய 

வெங்காயத்தின் சின்னஞ்சிறிய துண்டுகளையும்,

தக்காளித் துண்டுகளையும் போட்டு,வெங்காயம் 

பொன்னிறமாக மாறிடும் வரையிலும் நன்றாக 

வதக்கி வைக்கவும். அப்போதே அதற்குத் 

தேவையான உப்பையும் சேர்த்துக் கொள்ளவும். 

இவை நன்றாகவதங்கியவுடன், நன்றாக சூடு 

ஆறிட வைத்து நன்கு ஆறியபின்பு, அதை மிக்சி 

ஜாரில் போட்டு நன்றாக மையாக அரைக்கவும். 

(தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு நீர் 

ஊற்றலாம்) நன்கு மையாக அரைந்த 

பின்னர் நாம்   ஏற்கனவே தாளிச்சு எடுத்து 

வைத்துள்ள உடைச்ச உளுத்தம்பருப்பை 

மிக்சியில் போட்டு ஒன்று அல்லது ரெண்டு 

மூன்று சுற்றுக்கள் மட்டும் மிக்சி ஜாரை 

சுற்றவிட்டு, அதன்  பின்பு சட்னியை வெளியே 

எடுத்து பரிமாறவும். சுவையான சுசி சட்னி தயார்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். செF. திருமலை.இரா.பாலு.

திங்கள், 2 நவம்பர், 2015

சுவை மிகுந்த துவரம் பருப்பு சாதம் செய்வது எப்படி ? விளக்கிக்கூறிடும் சமையல் குறிப்புகள் !!







துவரம் பருப்பு சாதம்.


தேவையான பொருட்கள் :- ( நான்கு பேர்கள் 

சாப்பிட)1/16 வீசம் படிக்கு சற்று குறைவாக 

துவரம் பருப்பு,பொன்னி புழுங்கல் அரிசி 

அரைக்கால் படி அளவு, காய்ந்த சிவப்பு மிளகாய் 

6 ( சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்)புளி ஒரு 

நெல்லிக்காய் அளவிற்கு, தேங்காய் துருவியது 

கால் மூடி, சின்ன வெங்காயம் உரித்தது 6, 

நல்லெண்ணெய் தேவையான அளவு, உப்பு 

தேவையான அளவு, பெருங்காயத் தூள் 

சிறிதளவு, சீரகம் சிறிதளவு, கடுகு, உடைத்த 

உளுத்தம்பருப்பு  தாளிக்க,கருகப்பிலை 

சிறிதளவு.


செய்முறை :-   ( RICE COOKER METHOD )

முதலில் துவரம் பருப்பினை பிரஷர் குக்கரில் 

நன்குவேகவைத்து எடுத்துக்கொள்ளவும். 

நெல்லிக்காய் அளவு  புளியை நன்றாக 

ஊறவைத்து பின் அந்தக் கரைசலை 

தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ரைஸ் குக்கரில் அரைக்கால் படி அளவுள்ள 

பொன்னி புழுங்கல் அரிசிக்கு அதே அரைக்கால் 

படி அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து 

வேகவிடவும். அதன் பின் அந்த சாதம் மூன்றில் 

இரண்டு பங்கு வெந்தவுடன் அதில் கரைத்து 

வைத்த புளிக்கரைசலுடன், 6 சிவப்புமிளகாய் 

வற்றல் அதனுடன் மூன்று தோலுரித்த சின்ன 

வெங்காயம், இவற்றை மிக்சியில் அரைத்து 

எடுத்து இதை அந்த புளிக்கரைசலோடு சேர்த்துக் 

கலந்துபின்புஇதனுடன்மஞ்சள்தூள்,

பெருங்காயத்தூள், சாதத்திற்குத் தேவையான 

அளவு உப்பு கலந்து ரைஸ் குக்கரில் உள்ள 

முக்கால்பாகம் வெந்துள்ள சாதத்துடன் 

கலக்கவும். இது நன்றாக கொதித்து வற்றிய 

பின்பு தனியாக மிக்சியில் அரைத்து வைத்துள்ள 

கால் முறி தேங்காய்த்தூள்,மூன்று தோலுரித்த 

சின்ன வெங்காயம், சீரகம் சிறிதளவு இவற்றை

மிகவும் நைசாக அரைத்து அந்த விழுதை 

சாதத்துடன் ஊற்றி கருகப்பிலை சிறிதளவு 

கிள்ளிப்போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக் 

கிண்டிக்கொண்டே வரவும். சாப்பிடும் 

பக்குவத்திற்கு சாதம் வரும் வரை. 

இதன்பிற்கு அடுப்பில் வாணலியை 

அடுப்பில் வைத்து, சூடானவுடன் அதில் 

நல்லெண்ணெய் சற்று தாராளமாக ஊற்றி அது 

சூடானவுடன் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் 

ஒன்று,உடைத்த உளுத்தம் பருப்பு, கருகப்பிலை 

சிறிதளவு இவற்றையும் போட்டு நன்கு வதங்கி 

பொரிந்தவுடன் இதனை குக்கரில் உள்ள துவரம் 

பருப்பு சாதத்தினில் ஊற்றி ரைஸ் குக்கரை 

அணைத்துவிட்டு வேறு ஒரு பாத்திரத்திற்கு 

இதை மாற்றியபின் பரிமாறிடவும்.

இப்போது சுவைமிகுந்த துவரம்பருப்பு சாதம் 

தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள தயிருடன்,

பெரியவெங்காயத்தினை அறிந்து உப்பு சேர்த்து 

கலக்கி, சாப்பிட மேலும் சுவை கூடிடும். ( இந்த 

சமையல் குறிப்புக்கள் அனைத்தும் எனக்கு 

சமையல் கற்றுத்தந்த எனது குருநாதர் எனது 

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனது 

வாழ்க்கைத் துணைவி திருமதி B.புனிதவதி 

அவர்கள் எனக்குக் கற்றுத் தந்ததை நான் 

உங்களுக்கு கற்றுத் தருகிறேன்.


நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா. பாலு. 

சனி, 24 அக்டோபர், 2015

புளி மிளகாய் செய்வது எப்படி ?



                     " புளி மிளகாய் "





செய்யத் தேவையான பொருட்கள் :- புளி 

சிறிதளவு,(நெல்லிக்காயின் அளவு),பெரிய 

வெங்காயம் ஒன்று,பச்சை மிளகாய் பெரியதா 3, 

காய்ந்த மிளகாய் 1, உப்பு தேவையான அளவு, 

நல்லெண்ணெய் 1௦௦ மில்லி, வெல்லத்தூள் 

சிறிதளவு.


செய்முறை :- முதலில் பச்சைமிளகாயை 

சிறு,சிறு துண்டுகளாகவும், பெரிய 

வெங்காயத்தை சிறிய சைசிலும், காய்ந்த 

மிளகாயை சரி பாதியாகவும் நறுக்கி 

வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை 

வைத்து அது சூடானவுடன், நல்லெண்ணெய் 

ஒரு 1௦௦ மில்லி ஊற்றி அது நன்கு சூடானவுடன் 

அதில் நறுக்கி வைத்த பச்சைமிளகாய், காய்ந்த 

மிளகாய்,பெரிய வெங்காயத் துண்டுகள் 

இவற்றினைப் போட்டு நன்றாக வதக்க 

வேண்டும். இவைகள் நன்கு வதங்கிய பிறகு 

தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் ஊற 

வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும். நன்றாக 

இதை கிண்டிக்கொண்டே வரவும். நன்கு வற்றி 

அது தான் குடித்த எண்ணையை வெளியிட 

ஆரம்பித்ததும், தூளாக இடித்து வைத்துள்ள 

வெல்லத்தைபோட்டு,உப்பு சரி பார்த்து இறக்கி 

வைத்து நன்றாக ஆறிய பின்பு, கை படாமல் ஒரு 

பாத்திரத்தில் ஊற்றிவைத்து பின்னர் இதை தயிர் 

சாதம், மோர்சாதம், சப்பாத்தி முதலியவற்றிற்கு 

தொட்டுகொண்டு சாப்பிடவும்.

இப்போது சுவை மிகுந்த புளி மிளகாய் தயார்.

நன்றி. வணக்கம் 



அன்புடன். திருமலை.இரா.பாலு.

ஞாயிறு, 7 ஜூன், 2015

சுவைமிகுந்த பச்சை மிளகாய் தேங்காய் சட்னி செய்வது எப்படி ?





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!


அந்த வல்லோனின் புகழைப் பாடிடுவோம் !!


நாம் என்றும் ஒற்றுமையாகவே கூடிடுவோம் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் வணக்கம். நம்மில் 

அனேக மக்கள் உள்ளூரில் தாய்,தந்தை,உடன் 

பிறந்தோர், மனைவி,பிள்ளைகள், ஆகிய 

இப்படிப்பட்ட விலைமதிப்பில்லாத 

சொந்தபந்தங்களை எல்லாம் பிறந்த ஊரில் 

விட்டுவிட்டு, பிழைப்பிற்காக ஊர் 

விட்டு ஊர் வந்து வாழ்ந்து கொண்டிருப்பது 

என்பது உண்மைதான். இங்கே உணவு 

விடுதிகளில், உப்பு சப்பு இல்லாத உணவு 

வகைகளை உண்டு அதனால் உடலையும் 

கெடுத்து,மருத்துவருக்கும் மருந்துக்கடை

களுக்கும் ( டாஸ்மாக் தனி ) தங்களது 

வருமானத்தில் பெருவாரியான தொகைகளை 

செலவளித்துக்கொண்டிருப்பதும் உண்மையே. 

அதனால், இப்படிப்பட்ட செயல்களைக் 

களைந்திடும் பொருட்டு, அவர்களின் 

உடல்நலம் கருதியே, சொந்தமாக சமையல் 

செய்து சாப்பிட வேண்டும் என்ற உயரிய 

எண்ணத்தினை, எனது மனதின்பால் கொண்டு 

நான் உருவாக்கிய இணையதளம்தான் 

" என் சமையல் அறையில்...." என்பது.  

அந்த வகையில் இன்றையதினம் நான் 

உங்களுக்கு சமைத்து காட்டிட இருப்பது என்ன 

என்றால்;-


     பச்சை மிளகாய் தேங்காய் சட்னி.


செய்யத் தேவையான பொருட்கள் :-

பச்சைமிளகாய்5முதல்6வரை(காரத்தேவைக்கு 

ஏற்ப ), வெள்ளைப்பூண்டு 2 பற்கள், 

முந்திரிப்பருப்பு 5, பொரிகடலை கொஞ்சம், 

தேங்காய் துருவியது 1/2 மூடி அளவு, கடுகு 

சிறிதளவு, உடைச்ச  உளுத்தம் பருப்பு சிறிதளவு, 

கருகப்பிலை சிறிதளவு, உப்பு ( தேவையான 

அளவு ) நல்லெண்ணை தேவையான அளவு 

( தாளிக்க)


செய்முறை :-


முதலில் மிக்சி ஜாரில் பச்சை மிளகாய் 5 ஐ சிறிய 

துண்டுகளாக வெட்டி போடவும். பிறகு துருவிய 

தேங்காய் 1/2 மூடி அளவை அதில் போட்டு பின் 

தட்டிய வெள்ளைபூண்டையும், 

பொரிகடலையையும், முந்திரிபருப்பு 

ஆகியவற்றை போடவும். பிறகு சிறிதளவு 

தண்ணீர் ஊற்றி நன்றாக இந்தக் 

கலவையை ஓரளவு நைஸாக அரைத்து 

எடுத்துக்கொள்ளவும். ( உப்பு சரியாக 

உள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ளவும் ) 

பிறகு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து 

சூடானவுடன் இரண்டு கரண்டி நல்லெண்ணெய் 

ஊற்றி சூடானவுடன் அதில் கடுகைப் போட்டுஅது 

நன்கு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு 

( உடைச்சது) போட்டு அது பொன்னிறமாக 

வறுத்த பிறகு அதில் கருவேப்பிலை கிள்ளிப் 

போட்டு அதன் பிறகு இதை அரைத்து வைத்த 

சட்னியில் சேர்த்து பிறகு இட்லி, தோசைக்கு 

தொட்டுக்கொள்ள பரிமாறவும். 

இப்போது சுவைமிகுந்த பச்சை மிளகாய் 

தேங்காய் சட்னி தயார்.  


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.


( மதுரை. TR. பாலு )

புதன், 6 மே, 2015

சுவையான மோர்க்கொழம்பு செய்வது எப்படி ? விளக்கம் நிறைந்த சமையல் குறிப்புக்கள் !!







                      மோ  ர்  க்  கு  ழ  ம்  பு



செய்யத்தேவையான பொருட்கள் :-


மோர் 5௦௦ ml,சம்பா வற்றல் (நீளமான நன்கு

காய்ந்தது) 5 முதல் 7 வரை,தேங்காய் துருவியது 

ஒரு கப், பச்சைமிளகாய் 5, சீரகம் சிறிதளவு, 

சின்ன வெங்காயம் உரித்தது, வெள்ளைப்பூசணி  

அல்லது வெண்டைக்காய் 3, கடுகு, உடைத்த 

உளுத்தம்பருப்பு, வெந்தயம், சின்ன வெங்காயம் 

அரிந்தது,கருகப்பிலைசிறிதளவு,சம்பாவற்றல்,

நல்லெண்ணெய், சிறிதளவு, உப்பு தேவையான 

அளவு,பெருங்காயத்தூள் சிறிதளவு.




செய்முறை :-


முதலில் மிக்ஸியில் மிளகாய் வற்றல், 

தேங்காய் துருவியது,பச்சை மிளகாய், உரித்த 

சின்ன வெங்காயம், சீரகம் இவைகளை இட்டு 

நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும். 

அதன்பிறகு இந்த அரைத்த கரைசலை மோரில் 

விட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும். அத்துடன் 

தேவையான அளவு உப்பு, பெருங்காயம் 

சிறிதளவு இதையும் சேர்த்துக்கொள்க. 

வெண்டைக்காய் போடுவது எனில் அதனை சிறு 

சிறு துண்டுகளாக நறுக்கி அதை எண்ணை 

ஊற்றி வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு 

வேகவைத்து அதன்பின்பு கரைசலுடன் 

போடவேண்டும். 

வெள்ளைப் பூசணி போடுவதென்றால் 

வதக்கத் தேவை இல்லை.ஆனால் தண்ணீரில் 

நன்கு வேகவைத்துவிட்டு அதன் பிறகு 

கரைசலில் போடவும்.

வாணலியை  அடுப்பில் வைத்து அது நன்றாக 

காய்ந்ததும் அதில் நல்லெண்ணெய் 


ஊற்றி அதுவும் சூடானவுடன் கடுகு போடவும். 

அது வெடித்தவுடன் அதில் உடைத்த 

உளுத்தம்பருப்பு போட்டு அது நன்கு 

சிவந்தவுடன் கருகப்பிலை, அறிந்த சின்ன 

வெங்காயம் இவைகளையும் போட்டு 

அதன் பிறகு இதில் காய்ந்த மிளகாய் வற்றலைப் 

போட்டு அது நன்றாக வதங்கியதும், இதனை 

அப்படியே கரைத்து வைத்துள்ள 

மோர்க்கரைசலில் போட்டு அதன்பிறகு 

வாணலியில் இந்த மோர் கரைசலை ஊற்றி சூடு 

படுத்தவும். நொங்கு நுரை வந்தவுடன் 

( கொதிக்க விடக் கூடாது) உப்பு சரிபார்த்து 

இறக்கி பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை 

பரவலாக போட்டு பிறகு அதை சாதத்துடன் 

ஊற்றி பரிமாறிடவும். இப்போது சுவையான 

மோர்க்குழம்பு தயார். சாப்பிட்டு இன்புறுக . 


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை TR. பாலு )

சுவைமிகுந்த வத்தக்குழம்பு செய்வது எப்படி ? இதோ உங்களுக்காக !!








சுவைமிகு வத்தக்குழம்பு  ( புளிக்கொழம்பு )



செய்திடத் தேவையான பொருட்கள் :-


பழைய புளி ஒரு எலுமிச்சம்பழம் அளவு,

இதயம் நல்லெண்ணெய் 1௦௦ ML, உரித்த

மலைப்பூண்டு 10 பற்கள் சற்று பெரிதாக,

சின்ன வெங்காயம் 10, புளிக்கொழம்பு பொடி

3 மேஜைக்கரண்டி*, கருவேப்பிலை சிறிதளவு,

கடுகு 1 மேஜைக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு,

(* தேவைக்கேற்ப)

செய்முறை :-

முதலில் எலுமிச்சம்பழ அளவு புளியை சற்று

குளிர்ந்த நீரினில் ஊறவைக்கவும் சுமார் 20

நிமிடங்கள்  வரையில்.  அதன்பிறகு அடுப்பில்

வாணலியை வைத்து அது சூடானவுடன்

இதயம் நல்லெண்ணெய் சுமார் 50 ML வரையில்

ஊற்றி, அது சூடானபிறகு கடுகு, வெந்தயம், 

ஆகியவைகளை போட்டு வறுத்த பின்னர், 

கருகப்பிலைபோட்டு வதங்கியவுடன், அதில் 

மலைப்பூண்டு 10,உரித்த சின்ன வெங்காயம் 10, 

ஆகியவற்றை போட்டுஅதையும் நன்றாக பொன் 

நிறமாக வறுத்து அதன்பின்பு இவைகளை அப்படியே   நன்கு கரைத்து வைத்த அந்தக்கரைசலில் ஊற்ற வேண்டும். அதன்


பிறகு அந்த வாணலியில் புளிக்கொழம்பு போடி 3 முதல் 5 கரண்டி ( தேவைக்கேற்ப) போட்டு இந்தப்போடியையும் நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு இந்த வதக்கிய பொடியில் நாம் ஏற்கனவே கரைத்துவைத்திருக்கும் புளிக்கரைசலில் சற்று மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கி வாணலியில் ஊற்ற வேண்டும். மேதம் உள்ள நல்லெண்ணையையும் இதில் ஊற்றிவிடவும். நன்றாக கொதித்து கொழம்பு கரைசல் நன்றாக வற்றியவுடன் கொழம்பில் இருந்து எண்ணெய் வெளியே வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடான சாதத்தில் இந்த வத்தக் கொழம்பை ஊற்றி சாப்பிடவும். சுவையான இதுதான் வத்தக்கொழம்பு செய்திடும் வழிமுறை ஆகும். செய்து பார்த்துசாப்பிட்டு எனக்கு அதன் முடிவை சொல்லவேண்டிய மின்அஞ்சல்:- 


 astrobalu1954@gmail.com என்ற முகவரியில்


முடிந்தால் சொல்லவும்.


வத்தக்கொழம்பு பொடி செய்வது எப்படி ?


பொடி செய்யத்தேவையான பொருட்கள் :-




நீளமான மிளகாய் வற்றல்( நன்கு காய்ந்தது )

250 கிராம், மிளகு 2௦௦ கிராம், மல்லிவிதை 

2௦௦ கிராம், சீரகம் 1௦௦ கிராம், கருகப்பிலை 

1௦௦ கிராம். இதில் மிளகாய் வற்றலை நல்எண்ணெய் 1 கரண்டி ஊற்றி நன்கு வறுக்கவும். மீதி உள்ள பொருட்களான மிளகு,மல்லிவிதை,சீரகம், மற்றும் 
கருகப்பிலை ஆகியவற்றினை தனித்தனியாக 
எண்ணை எதுவும் ஊற்றாமல், தனியாக வாணலியில் வைத்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். சூடு நன்றாக ஆறியபின்பு, மிஷினில் கொடுத்து நன்கு நைஸாக பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தேவைக்கு ஏற்ப வற்றல் கொழம்பு செய்திடும்போது புளிக்கரைசலில் இந்தப் பொடியை மூன்று முதல் ஐந்து மேஜைக்கரண்டி சேர்த்து கொதிக்கவிட்டால், சுவையான
வற்றல்கொழம்பு தயார்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை.இரா.பாலு.


( மதுரை TR.பாலு )

புதன், 11 மார்ச், 2015

நீண்ட இடைவேளைக்குப் பிறகு....என் சமையல் அறையில்....வெள்ளைக்கறிக் கொழம்பு செய்வது எப்படி ?




எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற 


என் உயிரினும் மேலான அன்புத்தமிழ் 


நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் என் இனிய 

காலை வணக்கங்கள். மிக நீண்டநெடு 

நாட்களுக்குப்பிறகு " என் சமையல் 

அறையில் " வலை தளத்தினில் உங்கள் 

அனைவரையும் சந்திப்பதில் நான் மிகவும் 

மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இடைவெளிக்குக் 

காரணம், தொடர்ந்து பெரியதிரை மற்றும் 

சின்னத்திரை ஆகியவைகளில் படப்பிடிப்பு, 

தைப்பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகள், மற்றும் 

உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டி ஆகிய-

வற்றில் நான் அதீத ஈடுபாடு கொண்டவன் 

ஆதலால் இந்த இடைவெளி நிகழ்ந்து விட்டது.

அதற்காக உங்கள் அனைவரிடமும் நான் 

சிரம் தாழ்ந்து, கரம் குவித்து மன்னிப்பு கேட்டுக் 

கொள்கிறேன் என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இனிவரும்காலங்களில்,இதுபோன்றஇடைவெளி 

 நிகழாவண்ணம்,அந்தஎல்லாம்வல்லஇறைவன் 

" அல்லாஹ் " நம் அனைவருக்கும் 

அருள்பாலித்திடநான் எனது நெற்றி பூமியில் 

படும்வண்ணம் தூஆசெய்து வேண்டிக் 

கேட்டுக்கொள்கிறேன்.



இன்று நாம் காண இருக்கின்ற புதிய படைப்பு 

ஒரு கொழம்பு வகையைச் சேர்ந்தது. அதன் 

பெயர் 



                       வெ ள் ளை க் க றி  !!



இதற்குத் தேவையான மூலப்பொருள்கள்:-


முருங்கைக்காய்-3, கத்திரிக்காய்-1, தேங்காய் 

துருவியது ஒரு கப், சின்ன வெங்காயம் தோல் 

உரித்தது 7, இதிலேயே நறுக்கியது சிறிதளவு 

சீரகம் இரண்டு மேஜைக்கரண்டி, உப்பு 

தேவையான அளவு, கடுகு,உடைத்த உளுத்தம் 

பருப்பு, கருகப்பிலை சிறிதளவு, எண்ணை 

தேவையான அளவு,சிவப்பு மிளகாய் 


வற்றல் நான்கு முதல் ஐந்து வரை,புளி சிறிதளவு,

வெந்தயம் சிறிதளவு.



செய்முறை :-

முதலில் சிறிதளவு புளியை நன்கு அரை 

மணிநேரம் ஊறவைத்து அதை கெட்டியாகக் 

கரைத்து அதில் கரைசல் எடுத்து 

வைத்துக்கொள்ளவும். பிறகு அதில் 

தேவையான அளவு உப்பையும் சேர்த்து கரைத்து 

வைத்துக்கொள்ளவும். நறுக்கிவைத்துள்ள 

முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் 

இவைகளை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் 

ஊற்றி அதில் போட்டு நன்கு கொதிக்க்கவைத்து 

அவை வெந்தவுடன் வடிகட்டி எடுத்துவைத்துக் 

கொள்ளவும்.


ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய் பூ,

தோல் உரித்த சின்ன வெங்காயம் 7, சீரகம் 

இரண்டு மேஜைக்கரண்டி, சிவப்பு நீளமான 

மிளகாய் வற்றல் இவைகளை சிறிதளவு 

நீர்தெளித்து கட்டியாக நன்கு  அரைத்து எடுத்து 

வைத்துக்கொள்ளவும். இதனை நாம் ஏற்கனவே 

கரைத்து வைத்திருந்த புளிக்கரைசலில் 

போட்டு கட்டி இல்லாமல் கரைத்துவிடவும்.


அதன் பிறகு, அடுப்பில்வாணலியைவைத்து அது 


நன்கு சூடானவுடன், நான்கு கரண்டி இதயம் 

நல்லெண்ணெய் ஊற்றியபிறகு, 

கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு பின்பு 

கருகப்பிலையை அதில் போட்டு அதனுடன் 

சிறிதளவு வெந்தயம், நறுக்கிவைத்துள்ள சிறிய 

வெங்காயம்சிறிதளவு போட்டு கூடவே காய்ந்த 

மிளகாய் வற்றல் 2,அல்லது 3 போட்டு நன்கு 

வதக்கவும். பிறகு இதில் நாம் 

கரைத்துவைத்துள்ள, கொழம்பு கரைசலை 

ஊற்றி அதனுடன் வெந்துள்ள முருங்கைக்காய், 

மற்றும் கத்திரிக்காய் இவைகளையும் 

போடவேண்டும். நன்கு சூடாகி  லேசாக ஒரு 

கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு 

ஒரு பாத்திரத்தில் கொழம்பைவாணலியில் 

இருந்துஊற்றிபின் சாதத்தில்ஊற்றி பரிமாறவும். 

இப்போது சுவைமிகு வெள்ளைக்கறிக் 

கொழம்பு தயார்.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை T.R.  பாலு.)