புதன், 11 மார்ச், 2015

நீண்ட இடைவேளைக்குப் பிறகு....என் சமையல் அறையில்....வெள்ளைக்கறிக் கொழம்பு செய்வது எப்படி ?




எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற 


என் உயிரினும் மேலான அன்புத்தமிழ் 


நெஞ்சங்களே !!



உங்கள் அனைவருக்கும் என் இனிய 

காலை வணக்கங்கள். மிக நீண்டநெடு 

நாட்களுக்குப்பிறகு " என் சமையல் 

அறையில் " வலை தளத்தினில் உங்கள் 

அனைவரையும் சந்திப்பதில் நான் மிகவும் 

மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இடைவெளிக்குக் 

காரணம், தொடர்ந்து பெரியதிரை மற்றும் 

சின்னத்திரை ஆகியவைகளில் படப்பிடிப்பு, 

தைப்பொங்கல் திருநாள் நிகழ்ச்சிகள், மற்றும் 

உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டி ஆகிய-

வற்றில் நான் அதீத ஈடுபாடு கொண்டவன் 

ஆதலால் இந்த இடைவெளி நிகழ்ந்து விட்டது.

அதற்காக உங்கள் அனைவரிடமும் நான் 

சிரம் தாழ்ந்து, கரம் குவித்து மன்னிப்பு கேட்டுக் 

கொள்கிறேன் என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இனிவரும்காலங்களில்,இதுபோன்றஇடைவெளி 

 நிகழாவண்ணம்,அந்தஎல்லாம்வல்லஇறைவன் 

" அல்லாஹ் " நம் அனைவருக்கும் 

அருள்பாலித்திடநான் எனது நெற்றி பூமியில் 

படும்வண்ணம் தூஆசெய்து வேண்டிக் 

கேட்டுக்கொள்கிறேன்.



இன்று நாம் காண இருக்கின்ற புதிய படைப்பு 

ஒரு கொழம்பு வகையைச் சேர்ந்தது. அதன் 

பெயர் 



                       வெ ள் ளை க் க றி  !!



இதற்குத் தேவையான மூலப்பொருள்கள்:-


முருங்கைக்காய்-3, கத்திரிக்காய்-1, தேங்காய் 

துருவியது ஒரு கப், சின்ன வெங்காயம் தோல் 

உரித்தது 7, இதிலேயே நறுக்கியது சிறிதளவு 

சீரகம் இரண்டு மேஜைக்கரண்டி, உப்பு 

தேவையான அளவு, கடுகு,உடைத்த உளுத்தம் 

பருப்பு, கருகப்பிலை சிறிதளவு, எண்ணை 

தேவையான அளவு,சிவப்பு மிளகாய் 


வற்றல் நான்கு முதல் ஐந்து வரை,புளி சிறிதளவு,

வெந்தயம் சிறிதளவு.



செய்முறை :-

முதலில் சிறிதளவு புளியை நன்கு அரை 

மணிநேரம் ஊறவைத்து அதை கெட்டியாகக் 

கரைத்து அதில் கரைசல் எடுத்து 

வைத்துக்கொள்ளவும். பிறகு அதில் 

தேவையான அளவு உப்பையும் சேர்த்து கரைத்து 

வைத்துக்கொள்ளவும். நறுக்கிவைத்துள்ள 

முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் 

இவைகளை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் 

ஊற்றி அதில் போட்டு நன்கு கொதிக்க்கவைத்து 

அவை வெந்தவுடன் வடிகட்டி எடுத்துவைத்துக் 

கொள்ளவும்.


ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய் பூ,

தோல் உரித்த சின்ன வெங்காயம் 7, சீரகம் 

இரண்டு மேஜைக்கரண்டி, சிவப்பு நீளமான 

மிளகாய் வற்றல் இவைகளை சிறிதளவு 

நீர்தெளித்து கட்டியாக நன்கு  அரைத்து எடுத்து 

வைத்துக்கொள்ளவும். இதனை நாம் ஏற்கனவே 

கரைத்து வைத்திருந்த புளிக்கரைசலில் 

போட்டு கட்டி இல்லாமல் கரைத்துவிடவும்.


அதன் பிறகு, அடுப்பில்வாணலியைவைத்து அது 


நன்கு சூடானவுடன், நான்கு கரண்டி இதயம் 

நல்லெண்ணெய் ஊற்றியபிறகு, 

கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு பின்பு 

கருகப்பிலையை அதில் போட்டு அதனுடன் 

சிறிதளவு வெந்தயம், நறுக்கிவைத்துள்ள சிறிய 

வெங்காயம்சிறிதளவு போட்டு கூடவே காய்ந்த 

மிளகாய் வற்றல் 2,அல்லது 3 போட்டு நன்கு 

வதக்கவும். பிறகு இதில் நாம் 

கரைத்துவைத்துள்ள, கொழம்பு கரைசலை 

ஊற்றி அதனுடன் வெந்துள்ள முருங்கைக்காய், 

மற்றும் கத்திரிக்காய் இவைகளையும் 

போடவேண்டும். நன்கு சூடாகி  லேசாக ஒரு 

கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு 

ஒரு பாத்திரத்தில் கொழம்பைவாணலியில் 

இருந்துஊற்றிபின் சாதத்தில்ஊற்றி பரிமாறவும். 

இப்போது சுவைமிகு வெள்ளைக்கறிக் 

கொழம்பு தயார்.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை T.R.  பாலு.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக