திங்கள், 2 நவம்பர், 2015

சுவை மிகுந்த துவரம் பருப்பு சாதம் செய்வது எப்படி ? விளக்கிக்கூறிடும் சமையல் குறிப்புகள் !!







துவரம் பருப்பு சாதம்.


தேவையான பொருட்கள் :- ( நான்கு பேர்கள் 

சாப்பிட)1/16 வீசம் படிக்கு சற்று குறைவாக 

துவரம் பருப்பு,பொன்னி புழுங்கல் அரிசி 

அரைக்கால் படி அளவு, காய்ந்த சிவப்பு மிளகாய் 

6 ( சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்)புளி ஒரு 

நெல்லிக்காய் அளவிற்கு, தேங்காய் துருவியது 

கால் மூடி, சின்ன வெங்காயம் உரித்தது 6, 

நல்லெண்ணெய் தேவையான அளவு, உப்பு 

தேவையான அளவு, பெருங்காயத் தூள் 

சிறிதளவு, சீரகம் சிறிதளவு, கடுகு, உடைத்த 

உளுத்தம்பருப்பு  தாளிக்க,கருகப்பிலை 

சிறிதளவு.


செய்முறை :-   ( RICE COOKER METHOD )

முதலில் துவரம் பருப்பினை பிரஷர் குக்கரில் 

நன்குவேகவைத்து எடுத்துக்கொள்ளவும். 

நெல்லிக்காய் அளவு  புளியை நன்றாக 

ஊறவைத்து பின் அந்தக் கரைசலை 

தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ரைஸ் குக்கரில் அரைக்கால் படி அளவுள்ள 

பொன்னி புழுங்கல் அரிசிக்கு அதே அரைக்கால் 

படி அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து 

வேகவிடவும். அதன் பின் அந்த சாதம் மூன்றில் 

இரண்டு பங்கு வெந்தவுடன் அதில் கரைத்து 

வைத்த புளிக்கரைசலுடன், 6 சிவப்புமிளகாய் 

வற்றல் அதனுடன் மூன்று தோலுரித்த சின்ன 

வெங்காயம், இவற்றை மிக்சியில் அரைத்து 

எடுத்து இதை அந்த புளிக்கரைசலோடு சேர்த்துக் 

கலந்துபின்புஇதனுடன்மஞ்சள்தூள்,

பெருங்காயத்தூள், சாதத்திற்குத் தேவையான 

அளவு உப்பு கலந்து ரைஸ் குக்கரில் உள்ள 

முக்கால்பாகம் வெந்துள்ள சாதத்துடன் 

கலக்கவும். இது நன்றாக கொதித்து வற்றிய 

பின்பு தனியாக மிக்சியில் அரைத்து வைத்துள்ள 

கால் முறி தேங்காய்த்தூள்,மூன்று தோலுரித்த 

சின்ன வெங்காயம், சீரகம் சிறிதளவு இவற்றை

மிகவும் நைசாக அரைத்து அந்த விழுதை 

சாதத்துடன் ஊற்றி கருகப்பிலை சிறிதளவு 

கிள்ளிப்போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக் 

கிண்டிக்கொண்டே வரவும். சாப்பிடும் 

பக்குவத்திற்கு சாதம் வரும் வரை. 

இதன்பிற்கு அடுப்பில் வாணலியை 

அடுப்பில் வைத்து, சூடானவுடன் அதில் 

நல்லெண்ணெய் சற்று தாராளமாக ஊற்றி அது 

சூடானவுடன் அதில் கடுகு, காய்ந்த மிளகாய் 

ஒன்று,உடைத்த உளுத்தம் பருப்பு, கருகப்பிலை 

சிறிதளவு இவற்றையும் போட்டு நன்கு வதங்கி 

பொரிந்தவுடன் இதனை குக்கரில் உள்ள துவரம் 

பருப்பு சாதத்தினில் ஊற்றி ரைஸ் குக்கரை 

அணைத்துவிட்டு வேறு ஒரு பாத்திரத்திற்கு 

இதை மாற்றியபின் பரிமாறிடவும்.

இப்போது சுவைமிகுந்த துவரம்பருப்பு சாதம் 

தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள தயிருடன்,

பெரியவெங்காயத்தினை அறிந்து உப்பு சேர்த்து 

கலக்கி, சாப்பிட மேலும் சுவை கூடிடும். ( இந்த 

சமையல் குறிப்புக்கள் அனைத்தும் எனக்கு 

சமையல் கற்றுத்தந்த எனது குருநாதர் எனது 

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய எனது 

வாழ்க்கைத் துணைவி திருமதி B.புனிதவதி 

அவர்கள் எனக்குக் கற்றுத் தந்ததை நான் 

உங்களுக்கு கற்றுத் தருகிறேன்.


நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா. பாலு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக