செவ்வாய், 24 நவம்பர், 2015

சுவைமிகுந்த பாசிப்பருப்பு சாம்பார் (இட்லி,தோசைக்கு) செய்வது எப்படி ?








                 பாசிப்பருப்பு சாம்பார் !!
                        ( இட்லி மற்றும் தோசைக்கு )



செய்யத் தேவையானவை:-

உருளைக்கிழங்கு ஒன்று, தக்காளி ஒன்று,

பச்சைமிளகாய் 6, காரட் ஒன்று, பெரிய 

வெங்காயம் ஒன்று, சிறிய வெங்காயம் 6,

கொத்தமல்லி & கருகப்பிலை தேவையான 

அளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, மிளகாய் 

தூள் 3 மேஜைக்கரண்டி, மஞ்சள் தூள் 1 மேசைக் 

கரண்டி, பாசிப்பருப்பு ஒரு கை அளவு, கடுகு,

உளுத்தம்பருப்பு, 3 சிவப்பு மிளகாய் ( தாளிக்க)

உப்பு தேவையான அளவு,எண்ணைதேவையான 

அளவு.


செய்முறை :-

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தக்காளி, 

உருளைக்கிழங்கைதோலைசீவியபின்பு  

நறுக்க வேண்டும்,பச்சைமிளகாய், காரட் , பெரிய 

மற்றும் சிறிய வெங்காயம் இவைகளை நறுக்கி 

வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு  ஒரு 

பாத்திரத்தில் பாதி அளவிற்கு சற்றுக் குறைவாக 

நல்ல தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 

மேலே சொன்ன மூன்று மேஜைக்கரண்டி 

மிளகாய்த் தூள், ஒரு கரண்டி மஞ்சள் தூள், 

சிறிதளவு பெருங்காயத்தூள் 

இவைகளைப்போட்டு, 

அதில் ஒரு கையளவு பாசிப்பருப்பு, 

கருகப்பிலை,கொத்தமல்லி ஆகியவைகளையும் 

போட்டு,நன்றாக கலக்கியபின்பு அதில் நறுக்கி 

வைத்த காய்கறிகளை போடவும் பின் இதை மூடி 

ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அது 

நன்குகொதித்த பின்பு இந்த பாத்திரத்தை அந்த 

பிரஷர் குக்கரில் வைத்து, குக்கரில் இருந்து 

இரண்டு விசில் சத்தம் வந்தபின்பு காஸ் 

அடுப்பினை குறைவான வெப்பத்தில் சுமார் 15 

நிமிடம் வைத்த பின்பு, அடுப்பை அனைத்து 

விடவும். குக்கர் நன்றாக ஆறியபின்பு, 

அதைத்திறந்து அதில் உள்ள பாத்திரத்தை 

வெளியே எடுத்து அதன் பின்னர் மட்டுமே 

தேவையான அளவு உப்பு போடவேண்டும்.

அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து 

அது சூடானபிறகு அதில் கடுகு,உளுத்தம்பருப்பு,

போட்டுநன்குபொரிந்தவுடன்,அதில்கருகப்பிலை,

மற்றும் சிவப்பு மிளகாய் மூன்று ஆகியவற்றை 

போட்டு அதில், பாத்திரத்தில் உள்ள பாசிப்பருப்பு,

காய்கறி கலவைகளை போட்டு, நன்றாக 

கொதிக்க விட்டு, உப்பு சரி பார்த்து இறக்கினால் 

சுவைமிகுந்த பாசிப்பருப்பு சாம்பார் தயார்.

நன்றி !! வணக்கம் !!

செப். திருமலை.இரா.பாலு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக