ஞாயிறு, 7 ஜூன், 2015

சுவைமிகுந்த பச்சை மிளகாய் தேங்காய் சட்னி செய்வது எப்படி ?





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு !!


அந்த வல்லோனின் புகழைப் பாடிடுவோம் !!


நாம் என்றும் ஒற்றுமையாகவே கூடிடுவோம் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் வணக்கம். நம்மில் 

அனேக மக்கள் உள்ளூரில் தாய்,தந்தை,உடன் 

பிறந்தோர், மனைவி,பிள்ளைகள், ஆகிய 

இப்படிப்பட்ட விலைமதிப்பில்லாத 

சொந்தபந்தங்களை எல்லாம் பிறந்த ஊரில் 

விட்டுவிட்டு, பிழைப்பிற்காக ஊர் 

விட்டு ஊர் வந்து வாழ்ந்து கொண்டிருப்பது 

என்பது உண்மைதான். இங்கே உணவு 

விடுதிகளில், உப்பு சப்பு இல்லாத உணவு 

வகைகளை உண்டு அதனால் உடலையும் 

கெடுத்து,மருத்துவருக்கும் மருந்துக்கடை

களுக்கும் ( டாஸ்மாக் தனி ) தங்களது 

வருமானத்தில் பெருவாரியான தொகைகளை 

செலவளித்துக்கொண்டிருப்பதும் உண்மையே. 

அதனால், இப்படிப்பட்ட செயல்களைக் 

களைந்திடும் பொருட்டு, அவர்களின் 

உடல்நலம் கருதியே, சொந்தமாக சமையல் 

செய்து சாப்பிட வேண்டும் என்ற உயரிய 

எண்ணத்தினை, எனது மனதின்பால் கொண்டு 

நான் உருவாக்கிய இணையதளம்தான் 

" என் சமையல் அறையில்...." என்பது.  

அந்த வகையில் இன்றையதினம் நான் 

உங்களுக்கு சமைத்து காட்டிட இருப்பது என்ன 

என்றால்;-


     பச்சை மிளகாய் தேங்காய் சட்னி.


செய்யத் தேவையான பொருட்கள் :-

பச்சைமிளகாய்5முதல்6வரை(காரத்தேவைக்கு 

ஏற்ப ), வெள்ளைப்பூண்டு 2 பற்கள், 

முந்திரிப்பருப்பு 5, பொரிகடலை கொஞ்சம், 

தேங்காய் துருவியது 1/2 மூடி அளவு, கடுகு 

சிறிதளவு, உடைச்ச  உளுத்தம் பருப்பு சிறிதளவு, 

கருகப்பிலை சிறிதளவு, உப்பு ( தேவையான 

அளவு ) நல்லெண்ணை தேவையான அளவு 

( தாளிக்க)


செய்முறை :-


முதலில் மிக்சி ஜாரில் பச்சை மிளகாய் 5 ஐ சிறிய 

துண்டுகளாக வெட்டி போடவும். பிறகு துருவிய 

தேங்காய் 1/2 மூடி அளவை அதில் போட்டு பின் 

தட்டிய வெள்ளைபூண்டையும், 

பொரிகடலையையும், முந்திரிபருப்பு 

ஆகியவற்றை போடவும். பிறகு சிறிதளவு 

தண்ணீர் ஊற்றி நன்றாக இந்தக் 

கலவையை ஓரளவு நைஸாக அரைத்து 

எடுத்துக்கொள்ளவும். ( உப்பு சரியாக 

உள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ளவும் ) 

பிறகு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து 

சூடானவுடன் இரண்டு கரண்டி நல்லெண்ணெய் 

ஊற்றி சூடானவுடன் அதில் கடுகைப் போட்டுஅது 

நன்கு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு 

( உடைச்சது) போட்டு அது பொன்னிறமாக 

வறுத்த பிறகு அதில் கருவேப்பிலை கிள்ளிப் 

போட்டு அதன் பிறகு இதை அரைத்து வைத்த 

சட்னியில் சேர்த்து பிறகு இட்லி, தோசைக்கு 

தொட்டுக்கொள்ள பரிமாறவும். 

இப்போது சுவைமிகுந்த பச்சை மிளகாய் 

தேங்காய் சட்னி தயார்.  


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.


( மதுரை. TR. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக