வெள்ளி, 13 நவம்பர், 2015

சுசி சட்னி செய்வது எப்படி ?





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!

அஸ்ஸலாமு அலேக்கும் !!




                         சுசி சட்னி 



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் வணக்கம். தினசரி நமது 
காலை உணவில் இட்லி, தோசைக்கு,
தேங்காய் சட்னி, பச்சைமிளகாய் சேர்த்தும் 
சிவப்பு மிளகாய் சேர்த்தும் சாப்பிட்டு,சாப்பிட்டு 
அலுத்துசலித்துப் போனவர்கள், கீழே கண்ட 
சுசி சட்னியை அரைத்து சாப்பிட்டால் அதன் 
சுவை அறிந்து அதன் பின்பு நீங்க தேங்காய் சட்னி வேண்டவே வேண்டாம்ன்னுசொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.

என்ன....நான்..சொல்றது..செஞ்சு பாருங்க..
சாப்பிட்டுப்பார்த்திட்டு பிறகு சொல்லுங்க....

நன்றி.வணக்கம்.

அன்புடன். செF. திருமலை.இரா.பாலு.
******************************************************

சுசி சட்னி செய்யத் தேவையானவை :-

பெரியவெங்காயம் 2, தக்காளி 1 (நடுத்தர அளவு ),

பச்சைமிளகாய் 5, பெருங்காயத்தூள் சிறிதளவு,

உடைச்ச உளுத்தம்பருப்பு தாளிக்க, உப்பு மற்றும் 

எண்ணை தேவையான அளவு.


செய்முறை :-  (Method of cooking )

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அது 

சூடானவுடன் அதில் சிறிதளவு டபுள் ரீபைண்டு 

எண்ணையை ஊற்றவும். பின் அதில் உடைச்ச 

உளுந்து மற்றும் சிறிது பெருங்காயத் தூளை 

தூவி, உளுந்து பொன்னிறமானவுடன் அதனை 

தனியாக ஒரு சிறிய தட்டில் எடுத்து வைத்துக்

கொள்ள வேண்டும். பின்னர் அந்த வாணலியில் 

உள்ள சூடான எண்ணையில் ஏற்கனவே நறுக்கி 

வைத்துள்ள பச்சை மிளகாய் 5ஐ அதன் 

பச்சை நிறம் மாறிடும் வரை வதக்கியவுடன் 

அதில்  நறுக்கிவைத்த  இரண்டு பெரிய 

வெங்காயத்தின் சின்னஞ்சிறிய துண்டுகளையும்,

தக்காளித் துண்டுகளையும் போட்டு,வெங்காயம் 

பொன்னிறமாக மாறிடும் வரையிலும் நன்றாக 

வதக்கி வைக்கவும். அப்போதே அதற்குத் 

தேவையான உப்பையும் சேர்த்துக் கொள்ளவும். 

இவை நன்றாகவதங்கியவுடன், நன்றாக சூடு 

ஆறிட வைத்து நன்கு ஆறியபின்பு, அதை மிக்சி 

ஜாரில் போட்டு நன்றாக மையாக அரைக்கவும். 

(தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு நீர் 

ஊற்றலாம்) நன்கு மையாக அரைந்த 

பின்னர் நாம்   ஏற்கனவே தாளிச்சு எடுத்து 

வைத்துள்ள உடைச்ச உளுத்தம்பருப்பை 

மிக்சியில் போட்டு ஒன்று அல்லது ரெண்டு 

மூன்று சுற்றுக்கள் மட்டும் மிக்சி ஜாரை 

சுற்றவிட்டு, அதன்  பின்பு சட்னியை வெளியே 

எடுத்து பரிமாறவும். சுவையான சுசி சட்னி தயார்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். செF. திருமலை.இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக