புதன், 6 மே, 2015

சுவையான மோர்க்கொழம்பு செய்வது எப்படி ? விளக்கம் நிறைந்த சமையல் குறிப்புக்கள் !!







                      மோ  ர்  க்  கு  ழ  ம்  பு



செய்யத்தேவையான பொருட்கள் :-


மோர் 5௦௦ ml,சம்பா வற்றல் (நீளமான நன்கு

காய்ந்தது) 5 முதல் 7 வரை,தேங்காய் துருவியது 

ஒரு கப், பச்சைமிளகாய் 5, சீரகம் சிறிதளவு, 

சின்ன வெங்காயம் உரித்தது, வெள்ளைப்பூசணி  

அல்லது வெண்டைக்காய் 3, கடுகு, உடைத்த 

உளுத்தம்பருப்பு, வெந்தயம், சின்ன வெங்காயம் 

அரிந்தது,கருகப்பிலைசிறிதளவு,சம்பாவற்றல்,

நல்லெண்ணெய், சிறிதளவு, உப்பு தேவையான 

அளவு,பெருங்காயத்தூள் சிறிதளவு.




செய்முறை :-


முதலில் மிக்ஸியில் மிளகாய் வற்றல், 

தேங்காய் துருவியது,பச்சை மிளகாய், உரித்த 

சின்ன வெங்காயம், சீரகம் இவைகளை இட்டு 

நன்றாக நைசாக அரைத்துக்கொள்ளவும். 

அதன்பிறகு இந்த அரைத்த கரைசலை மோரில் 

விட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும். அத்துடன் 

தேவையான அளவு உப்பு, பெருங்காயம் 

சிறிதளவு இதையும் சேர்த்துக்கொள்க. 

வெண்டைக்காய் போடுவது எனில் அதனை சிறு 

சிறு துண்டுகளாக நறுக்கி அதை எண்ணை 

ஊற்றி வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு 

வேகவைத்து அதன்பின்பு கரைசலுடன் 

போடவேண்டும். 

வெள்ளைப் பூசணி போடுவதென்றால் 

வதக்கத் தேவை இல்லை.ஆனால் தண்ணீரில் 

நன்கு வேகவைத்துவிட்டு அதன் பிறகு 

கரைசலில் போடவும்.

வாணலியை  அடுப்பில் வைத்து அது நன்றாக 

காய்ந்ததும் அதில் நல்லெண்ணெய் 


ஊற்றி அதுவும் சூடானவுடன் கடுகு போடவும். 

அது வெடித்தவுடன் அதில் உடைத்த 

உளுத்தம்பருப்பு போட்டு அது நன்கு 

சிவந்தவுடன் கருகப்பிலை, அறிந்த சின்ன 

வெங்காயம் இவைகளையும் போட்டு 

அதன் பிறகு இதில் காய்ந்த மிளகாய் வற்றலைப் 

போட்டு அது நன்றாக வதங்கியதும், இதனை 

அப்படியே கரைத்து வைத்துள்ள 

மோர்க்கரைசலில் போட்டு அதன்பிறகு 

வாணலியில் இந்த மோர் கரைசலை ஊற்றி சூடு 

படுத்தவும். நொங்கு நுரை வந்தவுடன் 

( கொதிக்க விடக் கூடாது) உப்பு சரிபார்த்து 

இறக்கி பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை 

பரவலாக போட்டு பிறகு அதை சாதத்துடன் 

ஊற்றி பரிமாறிடவும். இப்போது சுவையான 

மோர்க்குழம்பு தயார். சாப்பிட்டு இன்புறுக . 


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை TR. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக