புதன், 6 ஜனவரி, 2016

சுவைமிகுந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி ?





            சேப்பங்கிழங்கு ரோஸ்ட் !!




தேவையான பொருட்கள் :-  

நீளவசம் உள்ள சேப்பங்கிழங்கு 250 கிராம், 
வறுப்பதற்கு எண்ணை தேவையான அளவு, 
உப்புத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ருசிக்கு 
ஏற்ப.

செய்திடும் முறை :-

முதலில் நீளவசம் உள்ள சேப்பங்கிழங்குகளை
நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து அதன் பின்னர் அதை ஒரு வாணலியில் உள்ள கொதிக்கும்நீரில் போட்டு நன்றாக வேக வைத்திடவும். அது நன்றாக வெந்த பிறகு அதை வெளியில் எடுத்து சூடு நீங்கி ஆற வைக்கவும். அதன்பின்பு அந்தக் கிழங்குகளை அதன் வெளிப்புறத் தோல்களை நீக்கி விட்டு நீள வசத்தில் ஒரு கிழங்கினை மூன்று முதல் நான்கு 
துண்டுகளாகநெட்டுவசத்தில்உடைந்துவிடாமல் 
பக்குவமாக நறுக்கி அதை நன்றாக காய வைக்க 
வேண்டும். சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் 
(நறுக்கி வெந்த கிழங்குத்துண்டுகளை) காய்ந்த பிறகு ஒரு வாணலியில் பொரிப்பதற்கு எண்ணையை விட்டு அது மிதமான சூடு அடைந்த பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்த சேப்பங்கிழங்குதுண்டுகளை போட்டு மிதமான சூட்டில் நன்றாக பிரவுன் நிறம் வருகின்ற வரை, அடுப்பின் அருகில் 
இருந்து கொண்டே நன்றாக கிழங்குத் துண்டுகளை கவனத்துடன் வறுக்கவேண்டும். எண்ணையில் பொங்கிடும் நுரைகள் அடங்கிவிட்டது என்றால், நன்றாக கிழங்கு 
துண்டுகள் வெந்து விட்டன என்று பொருள். அதன் பிறகு அந்தக் சேப்பங்கிழங்குத துண்டுகளை எண்ணைநன்றாக வடிந்த பிறகு அதில் தேவைக்கு/ருசிக்கு  ஏற்ப உப்புத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் தூவி நன்றாக 
பிறட்டி அனைத்துக் கிழங்குத் துண்டுகளிலும் அந்த தூள்களை நன்றாக கலந்திடும் படியாக பிறட்டிக்கொடுத்து அதன்பின்பு சாப்பிட பரிமாறவும். இப்போது சுவை மிகுந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.  திருமலை.இரா.பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக