செவ்வாய், 24 ஜூன், 2014

தக்காளி கிச்சடி செய்வது எப்படி ?







                    "  தக்காளி கிச்சடி  "                

 

             (THAKKAALI   KICHCHADI)                 


செய்யத் தேவையான பொருட்கள் :-   

            (REQUIRED INGREDIENTS) 


நாட்டுத்தக்காளி 1/2 கிலோ, பெரிய 


வெங்காயம் 1/2 கிலோ , 


பச்சைமிளகாய் 5 முதல் 6 வரை , 


கருகப்பிலை, நல்லெண்ணெய், 


பெருங்காயத்தூள், காய்ந்தமிளகாய் 


வற்றல் 5, உப்பு தேவையான அளவு.                         



செய்முறை :- (METHOD)                         


முதலில் வாணலியை அடுப்பில் 


வைத்து சூடானபிறகு 


நல்லெண்ணெய் விட்டு அதில்நன்கு 


பிளவுற்ற பச்சைமிளகாய் 5 முதல் 6 


போட்டுவிட்டு அது நன்றாக 


வதங்கியபின்பு அதில் நன்கு நெட்டு 


வசத்தில் வெட்டிய பெரிய 


வெங்காயம்  1/2 கிலோவை நன்றாக 


பொன்னிறமாக வதக்கவும். பிறகு 


அதில் நறுக்கிவைத்த நாட்டுத் 


தக்காளி 1/2 கிலோவை போட்டு 


மேலும் இரண்டு கரண்டி 


நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக 


வதக்கவும். பிறகு இவை 


அனைத்தும் மூழ்கும் விதமாக 


தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க 


விடவும். 5 முதல் 1௦ நிமிடம் வரை 


நன்றாக கொதிநீரில் வேகவைத்து 


வெந்தவுடன், குழிவான 


வடிகட்டியில் கொட்டி கொதிநீரை 


வடிகட்டவும். பிறகு ஒரு பெரிய 


தட்டில் தக்காளி,வெங்காயம்,பச்சை 


மிளகாய் வெந்ததை மின்விசிறியின் 


கீழ் வைத்து நன்றாக ஆற 


வைக்கவும். வடிகட்டிய நீரும் ஆறிட 


வேண்டும்.  நன்கு ஆறிய இந்த 


பொருட்களை மிக்சியில் வைத்து 


நன்றாக மசிய கடைந்து 


எடுத்துக்கொள்ளவும்.



அதன்பின்னர் மீண்டும் வாணலியை 


அடுப்பில் வைத்து சூடானவுடன் 


நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி 


ஊற்றி சூடானவுடன், கடுகு 


சிறிதளவு, உடைத்த வெள்ளை 


உளுத்தம் பருப்பு, இவைகளைப் 


போட்டு, கடுகு நன்கு வெடித்துச் 


சிதரியவுடன் அதில் கொஞ்சம் 


கருகப்பிலை இலைகளைப் போட்டு, 


5 சிவப்பு மிளகாய் வற்றல் 


கிள்ளிப்போட்டு அதன்பிறகு, 


நறுக்கிவைத்த (நெட்டு வசத்தில்) 


பெரிய வெங்காயத்தை கொஞ்சம் 


போட்டு பொன்னிறமாக வதக்கவும். 


பிறகு இதில் மிக்சியில் போட்டு 


நன்கு மசித்த தக்காளியை போட்டு 


அதனுடன், இரண்டு தேக்கரண்டி 


பெருங்காயத் தூளையும், 


தேவையான அளவு உப்பையும் 


சேர்த்து, வடிகட்டிய தண்ணீர் ஊற்றி 


நன்றாக கலந்து  கொதிக்கவிடவும்.


தேவைபட்டால் மேலும் கொஞ்சம் 


ஊற்றிக்கொள்ளவும். நன்றாக 


தளதளவென்று கொதித்தபின்னர் 


உப்பு சரி பார்த்து இறக்கிபரிமாறவும். 



இந்த தக்காளிக் கிச்சடி இட்லி, 


தோசை, சப்பாத்தி, பூரி, உப்புமா 


இவைகளுக்கும் சூடான 


சாதத்திற்கும், மோர் சாதத்திற்கும் 


சேர்த்து சாப்பிட்டால் மிகவும் 


நேர்த்தியான சுவையைத் தரும்.     


 செய்து பார்த்து சாப்பிட்டுப் 


பார்க்கவும்.                                                   



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன் மதுரை T.R. பாலு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக