வியாழன், 19 ஜூன், 2014

இட்லி மிளகாய்ப்பொடி செய்வது எப்படி ? இதோ உங்களுக்கு வழிகாட்டும் முறை இது !!






பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத் தமிழ்நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம்.  இன்றுமுதல் ஒரு 


புதிய வலைதளம்


      " என் சமையல் அறையில் "




என்னும் தலைப்பினில் உங்களுக்காக ஒரு 


வழிகாட்டிடும் கட்டுரைதலமாக வலம்வரக் 


காத்துக்கொண்டு இருக்கிறது. பார்த்து, படித்து 


அதேபோல செய்து ருசித்து சாப்பிட்டு 


வாழ்ந்திடுங்கள்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் SHEAF. மதுரை T.R. பாலு.


************************************************************************************************************



                     இட்லி மிளகாய்ப்பொடி !!
                                       
                                     

                   IDLY CHILLY POWDER
  

************************************************************************************************************



செய்யத்தேவையான பொருட்கள் :-


( INGREDIENTS  REQUIRED)



1/2  கிலோ கடலைப்பருப்பு, 1/2 கிலோ உடைத்த 

வெள்ளை உளுத்தம் பருப்பு,நன்கு காய்ந்த 

மிளகாய் வற்றல்,  1௦ நன்கு உரித்தமலைப்பூண்டு 

பல்,சிறிதளவு காய்ந்த கருகப்பிலை இலை, 3 

சிறிய கரண்டி பெருங்காயத்தூள், கொஞ்சம் 

நல்லெண்ணெய், உப்பு, தேவையான அளவு.



செய்யும் முறை :- (  METHOD  OF  PREPARATION )


அடுப்பில், வாணலியைவைத்து நன்றாக 


சூடானபிறகு அதில் கடலைப்பருப்பை நன்றாக 


பொன்னிறமாக வறுத்து அடுத்து ஒரு பேசினில் 


வைத்து ஆற வைக்கவும். இதுபோலவே 


உடைத்த உளுத்தம்பருப்பையும் பொன்னிறமாக 


வறுத்து பின் மற்றும் ஒரு பேசினில் 


ஆறவைத்திடு. அதன் பின்னர் அதேவாணலியில் 


சிறிதளவு நல்லெண்ணையை ஊற்றி அதில் 


7௦முதல் 9௦ வரை ( காரத்தின் தேவைக்கு ஏற்ப-1/2 


கிலோ கடலைப்பருப்பு, 1/2 கிலோ உடைச்ச 


உளுத்தம் பருப்பிற்கு எண்பது காய்ந்த சம்பா 


வற்றல் தேவைப்படும்.)சம்பா வற்றல் நன்கு 


காய்ந்ததைப் போட்டு கருக விடாமல் ஒரே 


சீராக கொஞ்சம் கல் உப்புபோட்டு 


வறுத்துஎடுத்து இதையும் 


ஆற வைக்கவும். பிறகு அதே வாணலியில் 


கருகப்பிலை, மற்றும் மலைவெள்ளைப்பூண்டு 


இவற்றைப்போட்டு இத்துடன் 3 தேக்கரண்டி 


பெருங்காயத்தூள் போட்டு இதையும் நன்றாக 


வறுத்துஎடுத்து ஆற வைத்திடவும். எல்லாம் 


நன்றாகஆறியபின்னர்இவைகள் (கடலைப்பருப்பு


உடைச்ச உளுந்தம்பருப்பு,கருகப்பிலை,பூண்டு,


மிளகாய் வற்றல் இவைகளை)அனைத்தையும் 


ஒன்று கலந்து மிக்சியில் நன்றாகஅரைத்திடவும் 


(அவரவர் தேவைக்கு ஏற்ப குருனையாகவே 


அல்லது நைசாக பொடியாகவோ) இப்போது 



சுவைமிகு இட்லி மிளகாய்ப்பொடி தயார்.



செஞ்சு பாருங்க. சாப்பிட்டபின் பதில் போடுங்க.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் SHEAF மதுரை  T.R. பாலு.                            



பின் குறிப்பு :- 1954ல் பிறந்த நான் எனக்கு 


வயது 21 ஆக இருக்கும்போதே எனது அன்புத் 



தந்தையாரும் தாயாரும்  எனக்குப் பார்த்த முதல் 



பெண்தான் , எனது அன்பு இல்வாழ்க்கைத் 


துணைவியாக அமைந்திட்ட புனிதவதி ஆகும். 


எனக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடுத்த 


குருநாதரும் அவரும்தான். அவருக்கு இந்தக் 


கட்டுரையை, எனது குரு காணிக்கையாக 


சமர்ப்பணம் செய்து தருவதில், மிக்க மன 


அமைதி அடைகின்றேன்.


குரு போற்றி !! குருவின் அருளே போற்றி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக