புதன், 21 டிசம்பர், 2016

இட்லி உப்புமா செய்வது எப்படி ? ... அது இப்படி !!





இட்லி உப்புமா செய்வது எப்படி ?

அது இப்படி !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு உங்கள்
அனைவரையும்  " என் சமையல் அறையில் "
என்ற வலைதளத்தில் சந்திப்பதில் நான் மிக்க
மன மகிழ்ச்சி அடைகிறேன் அன்புத்தமிழ்
நெஞ்சங்களே.

பொதுவாக, நம்மில் ஒவ்வொருவரின் வீட்டிலும்
காலையில் நாம் தயாரிக்கும் தினசரி உணவு
வகைகளில், மிகமிக முக்கியமானதோர்
இடத்தை வகிக்கும் திருவாளர்: இட்லி என்ற
பதார்த்தம், எப்படியாவது மிச்சப்பட்டுப்போவது
என்பது  தவிர்க்க இயலாத ஒன்று ஆகும்.
அப்படி மிச்சப்பட்ட இட்லியை எப்படி சுவைமிகு
உப்புமாவாக மாற்றுவது என்பதை உங்களுக்கு
விரிவாக, விளக்கமாக, செயல்முறை வடிவில்
சொல்லித்தருவதே இன்றைய எனது பணி
என்பதை இத்தருணத்திலே குறிப்பிடக் கடமைப்
பட்டுள்ளேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


                   " இட்லி உப்புமா "


செய்திடத் தேவையான பொருட்கள் :-

அவித்து வைத்து ஆறிய இட்லிகள் 6, மிளகாய் வற்றல் (சம்பா) நறுக்கிய துண்டுகள் 6, நல்லெண்ணெய் இரண்டுசிறு கரண்டி அளவு (தாளிக்க) கடுகு சிறிதளவு, உடைச்சவெள்ளை உளுத்தம் பருப்பு சிறிதளவு, பெருங்காயத்தூள்
சிறிதளவு, கருகப்பிலை சிறிதளவு, உப்பு கரைசல்சிறிதளவு.

செய்முறை :- ( Method of cooking )

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஆறிய
இட்லிகளை நன்றாக பிசைந்து, உதிர்த்து (கட்டி
இன்றி)தூளாக(உதிரி) வைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து பற்ற
வைக்கவும். சட்டி சூடான பிறகுதான் அதில் இரண்டுசிறிய கரண்டிகள் அளவு நல்லெண்ணெய் ஊற்றிஅது சூடானபிறகு அதில் கடுகு,உடைச்ச உளுத்தம்பருப்பு இவைகளைப்போட்டு பொன்னிறமாக பருப்பு
வந்தவுடன், கருகப்பிலை மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் இவைகளை போட்டு, நறுக்கிவைத்துள்ள சம்பாமிளகாய் வற்றலையும் போட்டு நன்கு வதக்கியபிறகுஅதில் உதிர்த்து வைத்துள்ள இட்லி தூளை போட்டுநன்றாக கிண்டி வரவும். அடுப்பில் தீயின் அளவை 
குறைத்து வைத்துக்கொள்ளவும்.இப்போது அந்த 
இட்லித்தூளின் மேல் நாம் ஏற்கனவேதயாரித்து வைத்துள்ள உப்புக்கரைசலை தெளிக்கவேண்டும். 
பிறகு அவைகள் ஒன்றுசேர கிண்டிக்கொண்டே 
வரவேண்டும். உப்பு போதுமா என்று பார்த்து 
இறக்கிய பின் பரிமாறவும். இப்போது சுவைமிகுந்த 
இட்லி உப்புமா தயார்.( பின் குறிப்பு:-  வாணலியில் ஒட்டி இருக்கும் 
இட்லி தூள் அதை ஒரு சட்டுவத்தால் சுரண்டி 
பொருக்குபோன்ற பதத்தில் இருக்கும் அதையும் 
விட்டுவிடாமல் சாப்பிடவும். மிக நன்றாக சுவை 
மிகுந்ததாக இருக்கும் நேயர்களே.)

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக